சாம்சங் ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு குட் நியூஸ்.. இந்தியாவுக்கு வரும் புதிய இலவச சேவை இதுதான்..

|

சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு புதிய இலவச சேவை அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்ட பின்பு புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பவர்கள் கூட, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை வாங்கலாம் என்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அப்படி எந்த சேவையை சாம்சங் இலவசமாக்கியுள்ளது என்பது தானே உங்களின் கேள்வி, வாருங்கள் சொல்கிறோம்.

சாம்சங் டிவி பிளஸ்

சாம்சங் டிவி பிளஸ்

செய்தி, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பலவற்றிற்கான உடனடி அணுகலை வழங்கும் சாம்சங்கின் ஸ்மார்ட் டிவி வீடியோ சேவையான 'சாம்சங் டிவி பிளஸ்' என்ற சேவையைத் தான் நிறுவனம் இப்பொழுது இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இப்போது இந்த சேவையை உலகளவில் 742 சேனல்களுடன் 12 நாடுகளுக்கு விரிவடைந்து 60 மில்லியனுக்கும் அதிகமான சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை அணுகுவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது.

இலவச சாம்சங் டிவி பிளஸ் சேவை

இலவச சாம்சங் டிவி பிளஸ் சேவை

இப்போது முதல் சாம்சங் டிவி பிளஸ் சேவை, சாம்சங் ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. சாம்சங் ஸ்மார்ட் டிவி உரிமையாளர்களுக்கு வீட்டிலிருந்து பார்க்கும் அனுபவத்தை வழங்க, டிவி பிளஸ் இப்போது உலகின் 300 முன்னணி ஒளிபரப்பு நெட்வொர்க்குகள், உள்ளடக்க தளங்கள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளர்களுடன் கூட்டாளர்களாக கைகோர்த்துள்ளது. புதிய விரிவாக்கத்துடன், சாம்சங் தொடர்ந்து உயர்மட்ட சேனல்களையும் சேர்த்து வருகிறது.

அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?

முதலில் இந்த 12 நாடுகளில் அறிமுகம்

முதலில் இந்த 12 நாடுகளில் அறிமுகம்

சமீபத்திய டிவி பிளஸ் இயங்குதள விரிவாக்கங்கள் ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட புதிய சேர்த்தல்களுடன் மொத்த சந்தை இருப்பை 12 ஆகக் கொண்டு வந்துள்ளது. தற்போதுள்ள சந்தைகளில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் கொரியா ஆகியவை அடங்கும்.

அடுத்து இந்தியாவில் இலவசம்

அடுத்து இந்தியாவில் இலவசம்

2021 ஆம் ஆண்டில், மெக்ஸிகோ, இந்தியா, சுவீடன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் இந்த இலவச டிவி பிளஸ் சேவையை சாம்சங் நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளது. சாம்சங், டிவி பிளஸை மற்ற சந்தைகளுக்கு விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த இலவச சலுகையை கருத்தில் கொள்வார்கள் என்று சாம்சங் நம்புகிறது.

Best Mobiles in India

English summary
Samsung TV Plus Coming To India Next Year For Free To Samsung Smart TV Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X