சாம்சங் பயனர்களுக்கு இனி இது இலவசம்.. சாம்சங் டிவி பிளஸ் சேவை அறிமுகம்

|

சாம்சங் நிறுவனம் இறுதியாக இந்திய பயனர்களுக்காக 'சாம்சங் டிவி பிளஸ்' சேவையை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சேவை சாம்சங்கிலிருந்து கிடைக்கும் ஒரு இலவச ஸ்ட்ரீமிங் சேவையாகும். இந்த சாம்சங் டிவி பிளஸ் சேவை OTT தளம் போல் செயல்படும் சாம்சங்கின் சொந்த தளமாகும். இது பயன்பாட்டின் போது வெவ்வேறு வகைகளிலிருந்து பயனர்களின் உள்ளடக்கத்தைப் பார்க்க அனுமதிக்கிறது.

இலவச ஸ்ட்ரீமிங் தளம்

இலவச ஸ்ட்ரீமிங் தளம்

சிறந்த விஷயம் என்னவென்றால், கட்டணம் செலுத்தப்படும் OTT தளம் போல் இல்லாமல் இது இலவசமாக விளம்பரங்கள் மற்றும் ஏராளமான பிரீமியம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்துடன் வருகிறது. கட்டண ஸ்ட்ரீமிங் தளமாகச் செயல்படும் தளங்களின் நன்மைகளை எந்தவித கட்டணமும் இல்லாமல் வழங்குகிறது. இதை அனுபவிக்க சாம்சங் பயனர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், உங்களிடம் சாம்சங் டிவி மட்டும் இருந்தால் போதும்.

சாம்சங் டிவி பிளஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சாம்சங் டிவி பிளஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்தியாவில் சாம்சங் டிவி உரிமையாளர்களுக்கு மட்டுமே சாம்சங் டிவி பிளஸ் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்க. 2017 க்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சாம்சங் டிவிகளும் சாம்சங் டிவி பிளஸை இயக்க முடியும். சாம்சங் டிவி பிளஸ் பயன்படுத்தக் கூடுதல் சாதனம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் டிவி பிளஸை இயக்க நீங்கள் ஒரு செட்-டாப் பாக்ஸ் அல்லது ஸ்மார்ட் டிவி ஸ்டிக் இணைக்கத் தேவையில்லை என்பதே இதன் அர்த்தம். இது ஏற்கனவே உங்கள் சாம்சங் டிவியில் நிறுவப்பட்டுள்ளது.

அப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.!!அப்போலோ 20 ரகசியம் அம்பலம் : நிலவில் கண்டறியப்பட்ட ஏலியன் பெண்.!!

இது மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்

இது மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்

சாம்சங் டிவி பிளஸ் அனுபவத்தை சிக்கல் இல்லாமல் அனுபவிக்க உங்களுக்கு தேவையானது ஒரு நல்ல இணைய இணைப்பு மட்டுமே. சாம்சங்கிலிருந்து டிவி பிளஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தி லைஃப்ஸ்டைல், செய்தி, கேமிங், தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல், இசை, திரைப்படங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகைகளில் இருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், சாம்சங் டிவி பிளஸின் சேவைகளை சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ஏப்ரல் 2021 இல் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

14 நாடுகளில் டிவி பிளஸ்

14 நாடுகளில் டிவி பிளஸ்

பயனர்கள் டிவி பிளஸ் பயன்பாட்டை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஸ்டோர் இரண்டிலிருந்தும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்தியா மட்டுமின்றி கூடுதலாக, சாம்சங் இப்போது ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கொரியா, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் டிவி பிளஸ் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung TV Plus a free OTT platform for Indian users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X