ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.! அதிரடி சலுகை.!

|

அன்மையில் சாம்சங் நிறுவனம் தனது 2020 க்யூஎல்இடி 8கே சீரிஸ் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த QLED 8K டிவி மாடல் ஆனது மெல்லிய வடிவமைப்பு, பெயரில் குறிப்பிடுவது போல 8கே படத் தரம் மற்றம் சரவுண்ட்-சவுண்ட் ஆடியோ ஆகியவற்றை இணைக்கும் தொழில்துறையின் முதல் 8K டிவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்சங் ஸ்மார்ட் டிவிகளின்

தற்சமயம் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவிகளின் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று கூறுவது போல இந்த டிவி தொடர் மீதான முன்பதிவுகளுக்கு சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் இரண்டு யூனிட்டுகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8கே சீரிஸின் மீது

மேலும் இந்த 2020க்யூஎல்இடி 8கே சீரிஸின் மீது ரூ.15,000-வரை கேஷ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அட்டகாச அறிவிப்பை சாம்சங் நிறுவனமா அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL-ன் புது திட்டம்: 600 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 250 நிமிட குரல் அழைப்பு- விலை தெரியுமா?BSNL-ன் புது திட்டம்: 600 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 250 நிமிட குரல் அழைப்பு- விலை தெரியுமா?

அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இ

2020க்யூஎல்இடி 8கே சீரிஸின் கீழ் உள்ள 65-இன்ச டிஸ்பிளே வடிவமைப்பை கொண்ட மாடலின் விலை ரூ.4,99லட்சம் ஆகும். இதன் 85-இன்ச் பதிப்பின் விலை ரூ.15.79 லட்சம்-ஆக உள்ளது. வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜூலை 10, 2020 வரை சாம்சங் நிறுவனத்தின்அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த 8கே டிவிகளின் முன்பதிவுகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நுகர்வோர் மின்னணு கடைகளிலும்

மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் சாம்சங் ஸ்மார்ட் பிளாசாக்களிலும், முன்னணி நுகர்வோர் மின்னணு கடைகளிலும் மற்றும'ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2020 க்யூஎல்இடி 8கே சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்கள்

2020 க்யூஎல்இடி 8கே சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்கள்

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இந்த 2020 க்யூஎல்இடி 8கே சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 99% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் அடாப்டிவ் பிக்சர் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதங்கள்.

மூன்று புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்.! நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை.!மூன்று புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்.! நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை.!

8கே தீர்மானம்

மேலும் இந்த சாதனங்களில் ரியல் 8கே தீர்மானம், சிம்பொனி மற்றும் ஆப்ஜெக்ட் ட்ராக்கிங் சவுண்ட் பிளஸ் போன்ற அம்சங்கள் இருப்பதால் சினமா தியேட்டர் அனுபவத்தை தரும். மேலும் ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிபையர், குவாண்டம் செயலி மற்றும் குவாண்டம் எச்டிஆர் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

Best Mobiles in India

English summary
Samsung TV offers Two Samsung Galaxy S20+ Smartphones at Free of Cost: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X