Home
News

இது நம்ம List-லயே இல்லையே.. 10-இன்ச் டிஸ்பிளேவுடன் Samsung-ன் புதிய G சீரீஸ் போன்.. தலை சுற்றும் விலை!

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Samsung Galaxy Unpacked 2025) வெளியீட்டு நிகழ்வானது வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நிச்சயமாக சாம்சங் நிறுவனத்தின் 2 நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது உறுதி. அவைகள் கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 மாடல்கள் ஆகும்.

தற்போது வரையிலாக, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Galaxy Z Fold 7) மாடலை மட்டுமே டீஸ் செய்துள்ளது. நிச்சயம் இது தனியாக அறிமுகம் செய்யப்படாது; கூடவே கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Galaxy Z Flip 7) மாடலும் அறிமுகமாகும். ஆக இவ்விரு மாடல்களும் நிச்சயமாக ஜூலை 9 நடக்கும் நிகழ்வில் வெளியாவது உறுதி!

10-இன்ச் டிஸ்பிளேவுடன் Samsung-ன் புதிய G சீரீஸ் போன்!

ஆனால் இந்நிகழ்வில் "வழக்கத்திற்கு மாறான" மேலும் 2 புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று - மலிவு விலையிலான கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ (Galaxy Z Flip 7 FE) மாடல். மற்றொன்று - சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் (Samsung's First Tri-Fold Smartphone)!

நேற்று (ஜூலை 3), நன்கு அறியப்பட்ட ஸ்மார்ட்போன் கேஸ் உற்பத்தியாளரான ஸ்பைஜென் (Spigen) ஆனது தற்செயலாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ ஆகிய இரண்டிற்குமான கேஸ்களை அதன் வலைத்தளத்தில் பட்டியலிட்டடு, புதிய எப்இ மாடலின் அறிமுகத்தை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி இருந்த நிலையில், தற்போது சாம்சங்கின் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

சாம்சங் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு (Samsung Tri Fold Smartphone Price Expected) அறிமுகம் செய்யப்படலாம்? தென் கொரியாவிலிருந்து வந்த ஒரு அறிக்கையின்படி, சாம்சங்கின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது "வானளாவிய" விலை நிர்ணயத்தை பெறும். உள்ளூரில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2,56,500 க்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கேலக்ஸி இஸட் போல்ட் 6 மாடலின் விலையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். இருப்பினும் இது தென் கொரிய மற்றும் சீன சந்தைகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தியா உட்பட மற்ற உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம்.

சாம்சங் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை (Samsung Tri Fold Smartphone Design Specifications Expected) பேக் செய்யலாம்? ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வழியாக கிடைத்த தகவலின்படி, சில ஸ்கெட்ச்களும் அதனுடன் இணைந்த அனிமேஷன் வீடியோவும் வெளிவந்துள்ளன. இது சாம்சங்கின் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போனை பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது.

இதன்கீழ் சாம்சங் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான டூயல்-கீல் மெக்கானிஸத்தை பயன்படுத்தும். இது இருபுறமும் உள்நோக்கி மடியும்படியான வடிவமைப்பாகும். இதன் விளைவாக ஜி-வடிவ கான்பிகரேஷன் ஏற்படுகிறது. இது எஸ்-வடிவ போல்ட்-ஐ பயன்படுத்தும் மற்றும் உலகின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்டி (Huawei Mate XT) மாடலில் இருந்து தனித்து நிற்கிறது.

இதன் காரணமாகவே சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது - சாம்சங் கேலக்சிஜி போல்ட் (Samsung Galaxy G Fold) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 10-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரலாம்.

பேட்டரியை பொறுத்தவரை 25W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவை பெறலாம். நினைவூட்டும் வண்ணம் ஹூவாய் மேட் எக்ஸ்டி மாடலில் 66W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. ட்ரை-போல்டின் பெரிய டிஸ்பிளே மற்றும் மிகவும் சிக்கலான உள் கட்டமைப்பை கருத்தில் கொண்டு சாம்சங் நிர்வாணம் இத்தகைய பழமைவாத சார்ஜிங் ஸ்பீடை பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Tri Fold Smartphone Galaxy G Fold Price Design Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X