Home
News

பரமா நம்மள ஏமாத்திட்டாங்க.. 200MP கேமராவை எதிர்பார்த்த கஸ்டமர்களுக்கு பல்பு கொடுத்த Samsung.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனின் அறிமுகம் நெருங்கி வரும் நேரத்தில்.. ஒரு புதிய லீக் ஆனது கலவையான எதிர்வினைகளை தூண்டி விட்டுள்ளது. குறிப்பாக - சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் சில முக்கிய மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள் மத்தியில்!

சாம்மொபைல் வழியாக கிடைத்துள்ள கேலக்ஸி கிளப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் மீண்டும் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா தான் பேக் செய்யப்பட உள்ளது. இதேதான் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மற்றும் எஸ்25 அல்ட்ரா இரண்டிலும் காணப்படுகிறது.

200MP கேமராவை எதிர்பார்த்த கஸ்டமர்களுக்கு பல்பு கொடுத்த Samsung!

இந்த சென்சார் 0.7µm பிக்சல்கள், ஃபேஸ்-டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 1/2.52-இன்ச் யூனிட் ஆகும். இது ஏற்கனவே நன்கு சோதிக்கப்பட்ட நீண்ட தூரத் தெரிவுநிலையை வழங்கும் ஒரு சென்சாராகும். இருப்பினும் அதே சென்சார் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம்

குறிப்பாக முந்தைய வதந்திகளில் ஒன்று இந்த ஸ்மார்ட்போனில் சிங்கிள் 200எம்பி ISOCELL டெலிஃபோட்டோ சென்சாருக்கு அப்கிரேட் செய்யப்படலாம் என்று கூறி இருந்தது. அதை மனதில் கொண்டு கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மீது ஆர்வம் வைத்தவர்களுக்கு அதே சென்சார் தான் இடம்பெறும் என்பது நிச்சயமாக மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கலாம்.

3.5எக்ஸ் அல்லது 8எக்ஸ் ஜூம் இடம்பெறக்கூடிய இரண்டாவது லென்ஸ் இன்னும் விரிவாக விவரிக்கப்படவில்லை. டெலிஃபோட்டோ அமைப்பை தாண்டி, கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அதே 200எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 50எம்பி அல்ட்ராவைடு லென்ஸுடன் ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் லீக் ஆன கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் எர்லி ப்ரோடோடைப்கள் (Early Prototypes) ஆனது -முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை டிஸ்பிளேவில் செல்பீ கேமராவிற்கான கட்அவுட் இருக்காது. அதாவது சாம்சங் அண்டர் டிஸ்பிளே செல்பீ கேமராவை (Under Display Selfie Camera) அறிமுகப்படுத்தலாம் என்று பரிந்துரைத்து இருந்தது.

200MP கேமராவை எதிர்பார்த்த கஸ்டமர்களுக்கு பல்பு கொடுத்த Samsung!

இந்த அண்டர் டிஸ்பிளே செல்பீ கேமரா பற்றிய வதந்தி உண்மையாக இருந்தால், சாம்சங் போன்களுக்கான வடிவமைப்பு அணுகுமுறையில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என்றும் அந்த நேரத்தில் பேசப்பட்டது. இந்நிறுவனம் ஏற்கனவே அதன் போல்டபிள் போன்களில் (கேலக்ஸி இசட் ஃபோல்ட் சீரீஸில்) அண்டர் டிஸ்பிளே கேமராக்களை பரிசோதித்துள்ளது. ஆனாலும் இந்த தொழில்நுட்பம், புகைப்படங்களின் தரத்தில் சமரசம் செய்வதால் அடிக்கடி விமர்சிக்கவும் படுகிறது. ஆக சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ராவின் செல்பீ கேமராவில் என்ன செய்ய போகிறது என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 (Samsung Galaxy Unpacked 2025) வெளியீட்டு நிகழ்வானது வருகிற ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பல சுவாரசியங்கள் காத்திருக்கலாம். நிச்சயமாக சாம்சங் நிறுவனத்தின் 2 நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது உறுதி. அவைகள் கேலக்ஸி இஸட் போல்ட் 7 மற்றும் கேலக்ஸி இஸட் பிளிப் 7 மாடல்கள் ஆகும்.

இதோடு "வழக்கத்திற்கு மாறான" மேலும் 2 புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று - மலிவு விலையிலான கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ (Galaxy Z Flip 7 FE) மாடல். மற்றொன்று - சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன் (Samsung's First Tri-Fold Smartphone) ஆகும். விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் ஜூலை 9 நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung to use Same 50MP telephoto camera with 5x optical zoom in Galaxy S26 Ultra Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X