Home
News

லண்டனில் அறிமுகமாகும் கேஸக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போன்!

By Super
லண்டனில் அறிமுகமாகும் கேஸக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போன்!

வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் சாம்சங் எஸ்-III ஸ்மார்ட்போன் வருகிற மே மாதம் 3-ஆம் தேதி லண்டனில் அறிமுகமாக இருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்திலேயே 9.2 கோடி மொபைல்போன்களை விற்பனை செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம். இதனால் முதல் இடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம், சாம்சங் நிறுவனத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த அதீத விற்பனைக்கு காரணம் இதன் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள் தான் என்று தாராளமாக சொல்லலாம். அந்த அளவு உயர்ந்த தொழில் நுட்பங்களை சாம்சங் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களில் கொடுத்துள்ளது சாம்சங்.

இதனால் கேலக்ஸி வரிசையான எஸ்-III ஸ்மார்ட்போன் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

ஆனால் உண்மையில் இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன புதிய தொழில் நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் என்று மே 3-ஆம் தேதி தான் முழுமையாக தெரிய வரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X