சாம்சங் பயனர்கள் எதிர்பார்த்திடாத மோசமான டிவிஸ்ட் இது தான்.. ஆப்பிளை பார்த்து ரூட் போடும் சாம்சங்..

|

சாம்சங் நிறுவனத்திடமிருந்து யாரும் இப்படி ஒரு செய்தியை எதிர்பார்த்திருக்க முடியாது, சாம்சங் அடுத்து அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன் பெட்டிகளிலிருந்து சார்ஜர்களை அகற்ற போவதாக நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாகச் சொல்லியுள்ளது. ஸ்மார்ட்போனின் சார்ஜ்ரை நீக்குவதன் மூலம் சாம்சங் நிறுவனமும் ஆப்பிள் வழியைப் பின்தொடருவது போல் தெரிகிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ்

புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ்

புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், கேலக்ஸி பட்ஸ் புரோவுடன் ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. முதன்மையான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் வழங்கும் சீன போட்டியாளர்களுடன் நேரடியாக போட்டியிட சாம்சங் திட்டமிட்டுள்ளதால், ஸ்மார்ட்போன்களில் செலவைச் சேமிப்பதற்கான சாம்சங்கின் வழி இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்பிளை கேலி செய்து போஸ்ட்

ஆப்பிளை கேலி செய்து போஸ்ட்

சாம்சங்கின் வரவிருக்கும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பெட்டிகளில் இருந்து சார்ஜர்களை நீக்குவது உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக நம்பப்படுகிறது. காரணம், கொரிய உற்பத்தியாளரான சாம்சங் நிறுவனம் ஐபோன் பெட்டிகளில் இருந்து சார்ஜர்களை அகற்றுவதற்காக ஆப்பிளை கேலி செய்து போஸ்ட் செய்த அனைத்து சமூக ஊடக போஸ்ட்களையும் நீக்கியுள்ளது. இந்த காரணத்தை வைத்து வெளியான தகவல் உண்மை தான் என்று நம்பப்படுகிறது.

புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. சியோமி Mi 10i ஜனவரியில் அறிமுகம்..புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. சியோமி Mi 10i ஜனவரியில் அறிமுகம்..

இலவசமாக நிறுவனம் அனுப்பும்

இலவசமாக நிறுவனம் அனுப்பும்

அமெரிக்காவில் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் பெட்டிகளிலிருந்து இயர்போன்களை நிறுவனம் நீக்கம் செய்த போது, சாம்சங் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இயர்போன்களை விரும்புவோர் அதற்காக சாம்சங்கை நேரடியாக அணுகலாம் என்றும், அவற்றை இலவசமாக நிறுவனம் அனுப்பும் என்றும் அந்நேரத்தில் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சார்ஜர்கள் இலவசம்

சார்ஜர்கள் இலவசம்

சாம்சங் இந்த முறையும் இதே திட்டத்தை பின்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நுகர்வோரின் கோரிக்கையின் பேரில் சார்ஜர்களை இலவசமாக அனுப்பக்கூடும் என்று ஒரு தரப்பு நம்புகிறது. ஆயினும்கூட, 2021 ஜனவரி மாதத்தில் சாதனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெறும் போது என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

English summary
Samsung to follow Apple's footsteps by removing the chargers from the boxes of Galaxy S21 series : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X