Home
News

Samsung-ன் புது போன்! குட்டி 4400mAh பேட்டரி, 200MP AI கேமரா, 1TB மெமரி, Snapdragon 8 Elite சிப்.. என்ன மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆனது வெறுமனே 200எம்பி ப்ரைமரி கேமராவை மட்டுமே கொண்டிருக்க போவதில்லை.. இதுவொரு ஏஐ-பவர்டு கேமராவாக (AI Powered Camera) இருக்கும் என்பது குறித்த தகவலும் கிடைத்துள்ளது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? எப்போது அறிமுகம்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது 12GB ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆகிய மெமரி ஆப்ஷன்களில் 2025 ஆம் ஆண்டு ஜூலை நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung-ன் புது போன்.. குட்டி 4400mAh பேட்டரி, 200MP AI கேமரா!

சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இதை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி இது அல்ட்ரா (Ultra) அம்சங்களுடன் நிரம்பியிருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சமீபத்திய டீஸர் ஆனது இது சில ஏஐ-பவர்டு கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் என்றும், இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் என்பதையும் காட்டுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங்கின் இந்த போல்டபிள் ஸ்மார்ட்போனானது 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? 200 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா சென்சாரை தவிர்த்து, இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஷிப்ட் (Snapdragon 8 Elite SoC)மூலம் இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

பேட்டரியை பொறுத்தவரை இது 25W சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரி மூலம் இயக்கப்படலாம். சாம்சங் நிறுவனத்தின் இந்த போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போனாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதை விரிக்கும்போது 3.9மிமீ அளவிலும், மடிக்கும்போது 8.9மிமி அளவிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஸ்மார்ட்பிரிக்ஸ் (SmartPrix) வழியாக கிடைத்த தகவலின்படி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 மாடல் ரூ.1,49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6-இன்ச் அளவிலான QXGA+ டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் அவுட்டர் டிஸ்பிளேவானது 410 பிபிஐ மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.3-இன்ச் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவாக உள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்களுக்கு, கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது இது 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Teased AI Camera Features in Galaxy Z Fold 7 Ahead Anticipated Launch in Mid July 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X