உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு, தப்பிக்குமா சாம்சங்..??

By Meganathan
|

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மற்றும் தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் பல காலமாக சண்டையிட்டு வருவது உலகம் அறிந்த விஷயமே. காப்புரிமை சார்ந்து இரு நிறுவனங்களும் நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் புதிய பஞ்சாயத்து ஒன்றை கூட்டியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடரிகளில் பாருங்கள்..

சாம்சங்

சாம்சங்

காப்புரிமை குறித்து நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் வழக்கு குறித்து சாம்சங் நிறுவனம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கின்றது.

அபராதம்

அபராதம்

காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் தவறு செய்திருப்பதை சுட்டிக்காட்டி கலிபோர்னிய நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு $930 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்தது, இதை எதிர்த்து சாம்சங் நிறுவனம் மேல் முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இழப்பு

இழப்பு

சாம்சங் நிறுவனத்தின் புதிய மனு வடிவமைுப்பு காப்புரிமை மற்றும் இதன் மூலம் ஏற்ப்பட்ட இழப்பு என இரு கேள்விகளை எழுப்பும்.

அமெரிக்கா

அமெரிக்கா

பொதுவாக இது போன்ற மனுக்களை அமெரிக்கா உச்ச நீதிமன்றம் வழக்கில் எடுத்து கொள்ளாது என்றும் கூறப்படுகின்றது.

வெற்றி

வெற்றி

இழப்பீடு குறித்து விசாரணையில் சாம்சங் நிறுவனம் அபராத தொகையை சில முறை குறைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கு

வழக்கு

இம்முறை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்டு சாம்சங் தரப்பில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அபராத தொகை குறைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

விசாரணை

விசாரணை

ஒரு வேலை அமெரிக்க நீதிமன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்தால் சாம்சங் நிறுவனம் அபராத தொகையை செலுத்த நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காப்புரிமை

காப்புரிமை

தொழில்நுட்ப உலகில் காப்புரிமை சார்ந்து பல நிறுவனங்களும் நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்து வந்தாலும், சாம்சங் மற்றும் ஆப்பிள் பிரச்சனை உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

முடிவு

முடிவு

இவ்வழக்கின் தீர்ப்பினை ஒட்டு மொத்த தொழில்நுட்ப உலகமே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதை விட வேறு வழியே இல்லை.

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
South Korean technology company Samsung is filing a petition to the US Supreme Court. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X