கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேஷன்: சாம்சங்

Posted By: Staff
கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேஷன்: சாம்சங்

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுக்காக அனைவரும் காத்திருக்கையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் வசதியினை வழங்கிறது.

கேலக்ஸி எஸ்-II ஐ-9100 மற்றும் ஐ-9100-ஜி ஆகிய இந்த இரண்டு மாடல்களிலும் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்யலாம்.

இதற்கு முன்பு ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டிருந்த கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் இப்போது ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதள வசதியினை பெறுகிறது.

இந்த புதிய அப்டேஷன் நிறைய தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். மேம்படுத்தப்பட்ட நிறைய அப்ளிக்கேஷன்களையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். மொபைல் நெட்வொர்க் டேட்டா போன்ற வசதிகளையும்  கூடுதலாக ஐசிஎஸ் அப்டேஷன் வழங்கும்.

இந்தியாவில் இந்த ஐசிஎஸ் அப்டேஷனை பெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் இந்த ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை அப்டேட் செய்கையில், அதில் உள்ள விவரங்களை சரிவர புரிந்து பின் அப்டேட் செய்வது இன்னும் சிறந்தது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்