சாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து!
சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலான 'ஸ்பேஸ் செல்ஃபி’ கடந்த வாரம் ஐரோப்பாவில் அறிமுகமானது என்பது பலர் அறிந்த செய்தி தான். இந்த மாடலில் சோலார் பவர் மிஷின் அடங்கிய கேட்ஜெட் இருப்பதால் இந்த மாடல் சந்தையில் வாடிக்கையாளர்களின் ஆச்சரியத்தை பெற்றது. இந்த மாடலில் தான் ஸ்பேஸ்க்கு கொண்டு செல்லப்படும் முதல் செல்பி உபகரணம் என்ற பெருமையை பெறுவதாக சாம்சங் அறிவித்திருந்தது.

இந்த புதிய சாம்சங் ஸ்பேஸ்செல்பி மாடல் உபகரணத்தை பிரபல நடிகர் மற்றும் மாடல் கேரா டெலிவிங்னே என்பவர் அறிமுகம் செய்தார். இந்த மாடல் பூமியில் இருந்து 35 கிமீக்கு அப்பாலும் செல்பி எடுக்கக்கூடிய அளவுக்கு திறன் உள்ளது என செளதம்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பேராசிரியர் ஹக் லீவீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த மாடல் அறிமுகத்தின்போது ஸ்பேஸ் செல்ஃபி குறித்த பலூன் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த திட்டம் கிட்டத்தட்ட சொதப்பியது என்றே கூறலாம். இந்த மாடலின் முதல் செல்பி க்ளிக் செய்யப்பட்டபோது, தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக திடீரென கீழே இறங்கி மிக்சிகன் அருகில் உள்ள விளை நிலத்தில் விழுந்தது. அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகப்பெரிய வெடி சத்தத்தை போல் உணரந்ததாகவும், அங்குள்ள குடியிருப்புகளில் இந்த ஸ்பேஸ் செல்பி மோதியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து சாம்சங் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியபோது, இந்த சம்பவம் திட்டமிட்டபடி நிகழவில்லை என்றும் ஸ்பேஸ் செல்பி பலூன் எதிர்பாராத தட்பவெப்ப நிலை காரணமாக மக்கள் வாழும் பகுதியில் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கீழே விழுந்த ஸ்பேஸ் செல்பி பலூனும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த செல்பியை முதல்முதலில் கிளிக் செய்த மாடல் மற்றும் நடிகர் கேரா டெலிவிங்னே இதனால் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. இருப்பினும் இவர் ஸ்பேஸில் கிளிக் செய்த செல்பி புகைப்படங்கள் அதிக அளவில் பரவி வருகிறது. இதுகுறித்து சாம்சங் கூறியபோது நடிகர் கேரா டெலிவிங்னே செய்த ஸ்பேஸ் புகைப்படம் போலவே விரைவில் ஒவ்வொருவருக்கும் கிளிக் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது
இந்த மாடல் குறித்து மேலும் வெளிவந்துள்ள செய்தி என்னவெனில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலை போன்றது இது என்றும், இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தற்போது சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்தில் அப்லோட் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. வளி மண்டலத்தில் இருந்து பூமியை நோக்கி எடுக்கப்படும் இந்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது


Click it and Unblock the Notifications








