குவியும் புகார்கள்.. Samsung கம்பெனியின் இந்த தயாரிப்பு உங்ககிட்ட இருக்கா.. அப்போ ஜாக்கிரதை!
சாம்சங் (Samsung) வழியாக கிடைத்த லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் (Latest Software Update) ஆனது பல சாம்சங் சவுண்ட்பார் யூனிட்களை (Samsung Sound bar Units) முற்றிலுமாக முடக்கியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் க்யூ800டி, க்யூ990டி மற்றும் க்யூ995டி போன்ற உயர்நிலை மாடல்களும் அடங்கும்.
இதன் விளைவாக சாம்சங் நிறுவனத்தின் சவுண்ட்பார்களின் விற்பனை திடீரென பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. ஏனென்றால் பெரும்பாலான பயனர்கள் தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டையும் சாம்சங் தயாரிப்பின் இரண்டு முக்கிய அம்சங்களாக நினைக்கிறார்கள்; அதே பயனர்கள், தங்களுடைய நம்பகமற்ற தன்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சாம்சங் நிறுவனமானது கடந்த வார தொடக்கத்தில் சேஞ்ச்லாக் எதுவும் இல்லாமல் ஃபார்ம்வேர் வெர்ஷன் 1020-ஐ கொண்ட ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன் பின்னரே பிரச்சனை எழுந்துள்ளது. சாம்சங்கின் கம்யூனிட்டி ஃபோரம் மற்றும் ரெடிட்டில் உள்ள ஏராளமான புகார்களின்படி, சாம்சங் சவுண்ட்பாரின் வெல்கம் மெசேஜ் ("ஹலோ") மற்றும் இன்புட் சோர்ஸையும் வெளிப்படுத்திய பிறகு சிக்கல் தொடங்குகிறது.
சாம்சங் சவுண்ட் பார் ஆனது டிவியுடன் கனெக்ட் ஆக தவறுகிறது. இதனால் டிவி அதன் பில்ட்-இன் ஸ்பீக்கர்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒலியளவை சரிசெய்வதன் மூலமோ அல்லது ரிமோட் அல்லது பிஸிக்கல் பட்டனை பயன்படுத்தி சவுண்ட்பாரை ஆப் செய்வதன் மூலமோ இந்த சிக்கலை சரிசெய்ய முடியவில்லை என்றும் பயனர்கள் புகார் அளித்துள்ளனர். பவர் கேபிளை துண்டித்து மீண்டும் இணைப்பதன் மூலமும் கூட இந்த சிக்கலை தீர்க்க முடியவில்லையாம்.
சாம்சங்கின் வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்கள் சிறிதளவு உதவியை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பல யூனிட்கள் சாம்சங்கின் தவறான அப்டேட்டின் விளைவாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அவை பயன்படுத்த முடியாததாகிவிட்டன. இது சாம்சங் நிறுவனத்தின் மென்பொருள் அப்டேட்டில் இருந்து நேரடியாக ஏற்பட்ட சிக்கல் என்பதால், யூனிட்களின் உத்தரவாத நிலையைப் பொருட்படுத்தாமல் டிவைஸ்களை மாற்றி கொடுக்குமாறு பயனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இதேபோல, பேட்டரி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறி கூகுள் நிறுவனமானது அதன் பழைய பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல் ஒன்றை ரீகால் (Recall) செய்ய தொடங்கி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூடவே குறிப்பிட்ட பிக்சல் மாடலை கொண்டுள்ளவர்கள், அதற்கு கிடைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாடல் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட - பிக்சல் 4ஏ (Pixel 4a) மாடலாகும். கூகுளின் இந்த சற்றே ஸ்மார்ட்போனுக்கு லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றின் காரணமாக ஆபத்து வந்துள்ளது. கடந்த ஜனவரி 2025 இல் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனிற்கு பேட்டரி பெர்பார்மென்ஸ் புரோகிராம் அப்டேட் (Battery Performance Program update) வெளியிடபட்டது.
இந்த சாப்ட்வேர் அப்டேட் ஆனது பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் ஒரு புதிய பேட்டரி மேலாண்மை அம்சத்தை கொடுக்கும்படி அமைக்கப்பட்டது. பழைய மாடலில் பேட்டரியின் செயல்திறனின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதே இதன் அப்டேட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது. இருப்பினும், பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி லைஃப் சிதைந்து போனதாக புகார் அளித்ததால் இது எதிர் விளைவை ஏற்படுத்தியது.
சில பயனர்கள் சில நிமிடங்களில் முழுமையான பேட்டரி டிஸ்சார்ஜை எதிர்கொண்டனர். எனவே கூகுள் அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கத்தில் ஒரு அறிக்கையை பகிர்ந்து கொண்டது. அது ஒரு எச்சரிக்கை ஆகும். அதன் வழியாக பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட் அந்த ஷார்ட் பேட்டரி லைஃப்பிற்கு வழிவகுக்கும் மற்றும் சார்ஜிங் செயல்திறனை குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








