கல்லூரியை மூட வைத்த சாம்சங் மொபைல்!!!

|

ஒரு மொபைல், கல்லூரியை மூட வைத்த சம்பவத்தை கேள்வி பட்டுள்ளீர்களா? அந்த சம்பவம் லாங் பீச் என்ற இடத்தில் நடந்துள்ளது. கேலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி லாங் பீச்சில் உள்ளது.

இங்கு அபாயகரமான ஆயுதம் கல்லூரி வளாகத்தில் இருப்பதாகவும் அதனால் மாணவர்கள் அனைவரும் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டது. மாணவர்களும் இந்த செய்தியை கேட்டு பயந்து வேகமாக வெளியேறினார்கள்.

கல்லூரியை மூட வைத்த சாம்சங் மொபைல்!!!

இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியது. மாணவர்கள் பயத்துடன் கல்லூரியில் இருந்து வெளியேறுவது டிவிகளிலும் அடிக்கடி ஒளிபரபப்பட்டது. போலிசாரும் மாணவர்களை வெளியேறச் சொல்லி மேலும் பயத்தை உண்டு பண்ணிவிட்டார்கள்.

கல்லூரியும் மாணவர்கள் வெளியேறியுடன் மூடப்பட்டது. இதில் சந்தோஷமான விஷியம் என்னவென்றால் மாணவர்கள் அவசரமாக வெளியேறும் பொழுது கூட்ட நெரிசலில் யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.

இதில் காமெடியான விஷியம் என்னவென்றால் அபாயகரமான ஆயுதம் என்று எதவும் கல்லூரி வளாகத்தில் இல்லை. கட்டுமான வேலைகளில் ஈடுபடும் வேலையாட்களில் ஒருவரின் சாம்சங் கேலக்ஸி மொபைலே தவறுதலாக துப்பாக்கி என்றும் அபாயகரமான ஆயுதம் என்றும் செய்தி பரவியுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X