Just In
- 8 hrs ago
ஒரே சார்ஜிங்கில் 25 நாள் யூஸ் பண்ணலாம்: Vivo அறிமுகம் செய்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!
- 10 hrs ago
Samsung Vs Xiaomi: ஒரே நேரத்தில் பிரமாண்ட போட்டி- எந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பெஸ்ட்?
- 10 hrs ago
அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?
- 11 hrs ago
போன் வாங்குற ஐடியா இருந்தா இந்த Vivo 5ஜி மாடலை சூஸ் பண்ணுங்க.! தரமான அம்சங்கள்
Don't Miss
- News
கடும் மழையில் தாமதமான உணவு டெலிவரி! வாடிக்கையாளரின் வலைதள பதிவால் மாற்றுத்திறனாளிக்கு குவியும் உதவி
- Automobiles
இந்தியாவில் அதுக்குள்ள இவ்ளோ செல்டோஸ் கார்கள் விற்பனை ஆயிருச்சா! இதையெல்லாம் நம்பவே முடியலயே!
- Movies
மொட்ட தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்த வடிவேலு.. எனக்கு எண்டே கிடையாதுடா!!
- Finance
ரூ.20 பாக்கி.. 22 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. எப்படி தெரியுமா?
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
- Sports
எல்லை மீறி செல்லும் ஊர்வசி - ரிஷப் பண்ட் சண்டை.. யார் கூறுவது உண்மை?.. இணையத்தில் வெடிக்கும் போர்!!
- Lifestyle
மழைக்காலத்துல உங்களுக்கு எந்த நோயும் வராமல் இருக்க இந்த புரத உணவுகள சாப்பிட்டா போதுமாம்!
- Education
இரண்டாவது பெரிய துறைமுகத்தில் பணி வாய்ப்பு?
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
இதுவரை எந்தவொரு நிறுவனமும் அறிமுகம் செய்யாத ஒரு புதிய சலுகை அறிவிப்பை சாம்சங் (Samsung) நிறுவனம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சலுகையின் படி, புதிய ஸ்மார்ட் டிவி அல்லது சாம்சங் லைஃப் ஸ்டைல் டிவிகளின் மேல் செல்லுபடியாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது சாம்சங் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்குப் பல மடங்கு நன்மையை வழங்கப்போகிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.

சாம்சங்கின் புதிய 'ஸ்மார்ட் அப்கிரேட் புரோகிராம்' சலுகை
சாம்சங் அறிமுகம் செய்துள்ள இந்த 'Smart Upgrade Program' சலுகையில் படி, சாம்சங் லைஃப்ஸ்டைல் சீரிஸ் அல்லது பிரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை நீங்கள் வாங்கும் போது, இதன் மொத்த விலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான கட்டணத்தை மட்டும் முதலில் செலுத்துவதன் மூலம் சாம்சங் பிராண்டின் டிவிகளில் ஒன்றை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். எஞ்சியுள்ள அல்லது மீதமுள்ள தொகையை நீங்கள் 12 மாதம் கழித்துச் செலுத்தினால் கூட போதுமானது என்று நிறுவனம் கூறியுள்ளது.

முதலில் கொஞ்ச கட்டணம்.. பிறகு 12 மாதம் கழித்து கொடுங்க போதும்
ஆம், நீங்கள் முதலில் செலுத்திய கட்டணம் போக, மிச்சம் உள்ள கட்டணத்தை ஒரு வருடம் கழித்துக் கூட நீங்கள் செலுத்தினால் போதும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன் வரை, இதுபோன்ற ஒரு சலுகையை எந்தவொரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூப்பர் கூலான சலுகை, தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் டிவி மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது.

சாம்சங் ஃப்ளிப்கார்ட் உடன் இணைந்து நடத்தும் நம்ப முடியாத டீல்
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனம் இப்போது ஃப்ளிப்கார்ட் உடன் இணைந்து இந்த சலுகையை வழங்கியுள்ளது. சரி, இப்போது இந்த சலுகை எப்படிச் செயல்படும் என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம். முன்பே சொன்னது போல், சாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட டிவி மாடல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் போது, அந்த புதிய டிவியின் மொத்த விலையில் இருந்து வெறும் 70% தொகையை மட்டும் ஆரம்ப கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

30% சதவீதத் தொகையை பிறகு செலுத்தலாமா?
பிறகு, எஞ்சியுள்ள மிச்ச தொகையை, அதாவது 30% சதவீதத் தொகையை வாடிக்கையாளர்கள் டிவியை வாங்கிய தேதியிலிருந்து 12 மாதங்களுக்குப் பிறகு செலுத்தினால் போதும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணமாக, நீங்கள் Samsung Crystal 4K UHD டிவியை வாங்கினால், முதல் கட்டண தொகையாக நீங்கள் வெறும் ரூ.23,093 மட்டும் செலுத்தினால் போதும். மீதமுள்ள ரூ.9,897 தொகையைச் சரியாக 12 மாதங்களுக்குப் பிறகு செலுத்தக் கோரி நிறுவனம் கூறியுள்ளது.
IRCTC Rules: ரயிலில் பயணிக்க 'இது' கட்டாயமா? மிடில் பெர்த் ரூல்ஸ்-னா என்ன தெரியுமா?

Samsung Frame சீரிஸ் டிவிகளை வாங்க சரியான நேரம் இது தான்
Samsung Frame 2021 சீரிஸ் வரிசையில் இருக்கும் QLED Ultra HD டிவி மாடலை நீங்கள் தேர்வு செய்தால், முதல் ஆரம்ப கட்டணமாக வெறும் ரூ.38,493 மட்டும் நீங்கள் முன்பணமாகச் செலுத்தினால் போதுமானது. பின்னர், மீதமுள்ள ரூ.16,497 தொகையை நீங்கள் 12 மாதங்களுக்குப் பிறகு செலுத்தலாம். இந்த முறையில் தான் சாம்சங் நிறுவனத்தின் 'ஸ்மார்ட் அப்கிரேட் புரோகிராம்' செயல்படப்போகிறது. நீங்கள் வாங்கும் போது 70% செலுத்தி, 12 மாதங்களுக்குப் பிறகு 30% செலுத்தினால் போதும்.

சிறந்த முறையில் பிரீமியம் சாம்சங் டிவிகளை வாங்கலாம்
இந்த சலுகையைச் சரியாகப் பின்பற்றினால், பிரீமியம் சாம்சங் டிவிகளை நீங்கள் சிறந்த முறையில் வாங்கி பயன்பெறலாம். உண்மையில், இந்த ஸ்மார்ட் அப்கிரேட் புரோகிராம், உங்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சலுகை இப்போது சாம்சங்கின் லைஃப்ஸ்டைல் மற்றும் பிரீமியம் டிவிகளான, நியோ QLED, கிரிஸ்டல் UHD டிவிகள் மற்றும் ஃபிரேம் சீரிஸ் மாடல்கள் மீது கிடைக்கிறது.

ஃபிரேம் செய்யப்பட்ட வால் போஸ்டர்கள் போல் ஸ்மார்ட் டிவி
இந்த ஃபிரேம் சீரிஸ் பிரீமியம் டிவிகளை நீங்கள் பயன்படுத்தாத போது, 1,400 க்கும் மேற்பட்ட கேலரி படங்களை பிரதிபலிக்கும் ஃபிரேம் செய்யப்பட்ட வால் போஸ்டர்கள் போலக் காட்சியளிக்கிறது. வழக்கமான சாதாரண ஸ்மார்ட் டிவிகளை வாங்கத் திட்டமிட்டிருக்கும் மக்கள் இந்த சலுகையைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆம், நீங்கள் வாங்க விருப்பும் சாதாரண ஸ்மார்ட் டிவியின் முழு கட்டணத்தை, இங்கு 70% முதல் கட்டண தொகையாகச் செலுத்துவதன் மூலம் பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

பிரீமியம் டிவிகளை வாங்க இதை விட சிறந்த சலுகை கிடைக்கவே கிடைக்காது
பிறகு, 12 மாதங்கள் கழித்து எஞ்சியுள்ள 30% தொகையை மட்டும் செலுத்தினால் போதும். முதல் கட்டணம் செலுத்திய உடனே புது பிரீமியம் ஸ்மார்ட் டிவி உங்களுடையதாகிவிடும் என்பதனால் இந்த சலுகையைக் கருத்தில் கொண்டு, புது ஸ்மார்ட் டிவியை நீங்கள் வாங்கலாம். பிரீமியம் ஸ்மார்ட் டிவிகளின் வீடியோ தரமும், ஆடியோ தரமும் தியேட்டருக்கு நிகரான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதால், இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086