சாம்சங் நிறுவனத்தின் அருமையான திட்டம்? இந்தியாவில் உற்பத்தி.! வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் பொருட்கள் சிறந்த தரம் கொண்டு வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மிகவும் பிரபலமான சாம்சங் நிறுவனம் தனது உற்பத்தியை விரைவில் இந்தியாவில் துவங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபற்றிய விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

அதாவது சர்வதேச அளவில் மொபைல் போன்ற உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் பி.எல்.ஜி (உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டம்) மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

வெளிவந்த தகவலின்படி சாம்சங், பாக்ஸ்கான், விஸ்டரான், பெகட்ரான், லாவா, டிக்சான், மைக்ரோமேக்ஸ் என சுமார் 22நிறுவனங்கள் செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான செல்போன் மற்றும் அதற்கான உதிரிபாகத்தினை உற்பத்தி செய்யஇந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளன.

குறிப்பாக இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கியுள்ளன, இதன் மூலம் இந்த நிறுவனங்கள் சுமார் பதினோரு ஆயிராம்கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யும் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள்.

இதை உறுதி செய்யும் வகையில் தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான செல்போன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வணிக செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை நிறுவனங்கள் உறுதி செய்துள்ளது.

மேலும் மலிவான சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதும், ஏற்றுமதிய உட்பட இந்தியாவில் தொழில் தொடங்க ஏராளமானசலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதுமே சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை துவங்க காரணமாக கூறப்படுகிறது.

தற்சமயம் அதற்கான இறுதிக்கட்ட பணிகளை சாம்சங் நிறுவனம் மேற்கொண்டுவருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு வியட்நாம்,பிரேசில் மற்றும் இந்தோனிஷியா போன்ற நாடுகளுக்கு அடுத்தப்படியாக சாம்சங் நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications