சாம்சங் சாதனை: ஒரு நிமிடத்திற்கு 500 மொபைல்கள் விற்கப்படுகின்றன!!!

Posted By: Staff
சாம்சங் சாதனை: ஒரு நிமிடத்திற்கு 500 மொபைல்கள் விற்கப்படுகின்றன!!!

உலகின் முன்னணி சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் புதிதாக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்நிறுவனத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் 500 மொபைல்கள் விற்கப்படுகின்றனவாம். கடைசி காலாண்டில் மட்டும் இதன் வருமானம் அமெரிக்காவின் டாலர் மதிப்பில் சுமார் 8.1 பில்லியன்கள்!

இந்த சாதனைக்கு முக்கியக்காரணமாக சொல்லப்படுவது சாம்சங் கேலக்ஸி நோட் II. மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சாம்சங் சாதனம் நல்ல தரமானது. மேலும் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டது.

 

நோக்கியா டேப்லெட் வடிவமைப்புகள்

கடந்த 2012ல் பல்வேறு மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சாதனங்களை சந்தைப்படுத்தியுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5 மட்டுமே வெளியிட்டது. சாம்சங் 37 வெவ்வேறு போன்களையும், HTC 18ஐயும், நோக்கியா 9 போன்களையும் மற்றும் LG 24 போன்களையும் வெளியிட்டது.

சாம்சங் அறிக்கையின்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான கால இடைவெளியில் இந்நிறுவனத்தின் வருமானம் அமெரிக்காவின் டாலர் மதிப்பில் சுமார் 230 பில்லியன்கள். வருடத்தின் மொத்த வருமான கணக்கும் ஜனவரி 25ஆம் தேதிதான் வெளியாகுமாம்.

 

மின்சாரம் சேமிக்க - மொபைல் போன்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 3 தான் விற்பனையை அதிகமாக்க மேலும் வலுசேர்த்தது எனலாம். மேலும் இந்நிறுவனத்தின் வருடவருமானம் பல மடங்காக உயர்ந்ததும் கடந்த வருடமே!

 

அசத்தலான “சூப்பர் கணினிகள்” [படங்கள்]

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot