Home
News

இனி வயதான பெற்றோருக்கு சாம்சங் டிவி பெஸ்ட் சாய்ஸ்! அப்படிவொரு அம்சம் வந்துருக்கு!

சாம்சங் (Samsung) நிறுவனம் வண்ண பார்வை குறைபாடு உள்ளவர்களும் டிவிகளில் வரும் வண்ணங்களை எளிதாக பிரித்து பார்க்கும் வகையில், சீகலர்ஸ் மோட் (SeeColors Mode) என்னும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வயதான பெற்றோருக்கு, இந்த வண்ணக் குறைபாடு வருவது அதிகமாவிட்டது.

பெற்றோர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க வேண்டுமென்று உழைக்கும் பிள்ளைகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது டிவிகளே. ஏனென்றால், பெரும்பாலான பெற்றோர்கள், தங்களது முதுமை காலத்தை டிவிகளை பார்ப்பதிலேயே செலவழிக்கின்றனர். இதனால், பிள்ளைகளும் எவ்வளவு கொடுத்தும் டிவிகளை வாங்குவதற்கு சிறிதும் யோசிப்பதில்லை. அவ்வளவு ஆசையாக வாங்கி கொடுத்த டிவிகளில் வரும் கலர்களை பெற்றோர்களால் பார்க்க முடியாமல் போனால், எப்படி இருக்கும்?

இனி வயதான பெற்றோருக்கு சாம்சங் டிவி பெஸ்ட் சாய்ஸ்! ஏன் தெரியுமா?

மனதே உடைந்துவிடும் அல்லவா? பொதுவாக வயாதான பின்பு பெற்றோர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், அவர்களால் டிவிகளை பார்க்க முடியும். ஆனால், கலர் பிளைண்ட்னஸ் (Color Blindness) வந்துவிட்டால், எச்டி டிவி, எல்இடி டிவி, ஓஎல்இடி டிவி என எது வாங்கினாலும், அவர்களால் கலர்களை பிரித்து பார்க்க முடியாது. இதனை சரிசெய்ய பல்வேறு தொழில்நுட்பங்கள் டிவிகளில் கொண்டுவரப்படுகின்றன.

அந்த வரிசையில், முதலாவதாக சாம்சங் நிறுவனம், தனது டிவி மற்றும் மானிட்டர்களில் சீகலர்ஸ் மோட் அம்சத்தை கொண்டுவந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் வெளியான டிவிகள் மற்றும் மானிட்டர்களில் இந்த சீகலர்ஸ் மோட் அம்சத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் வண்ணப் பார்வைக் குறைபாடு உள்ளவர்களும், கண்ணாடிகளை பயன்படுத்தாமலேயே எளிதாக டிவிகளில் வரும் வண்ணங்களை அறிய முடியும்.

சொல்லப்போனால், அவர்களுக்கு டிவி பார்ப்பது என்பது மிகுந்த சுவாரஸ்யமானதாக மாறிவிடும். சீகலர்ஸ் மோட் அம்சம் டிவி ஸ்கீரினில் தோன்றும் ரெட், கிரீன் மற்றும் புளூ நிற அளவுகளை வண்ணக் குறைபாடு உள்ளவர்கள் அறிந்து கொள்ளும்படி மாற்றி அவர்களுக்கு காட்டும். இதனால் அவர்களால் அனைத்து நிறங்களையும் வேறுபடுத்தி பார்க்க முடியும். இந்த அம்சம் 2017ஆம் ஆண்டில் ஆப் வடிவில் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இப்போது டிவிகளிலேயே வரும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இப்போது, செட்டிங் மெனுவிலேயே சீகலர்ஸ் மோட் அம்சம் இடம்பெற்றுள்ளது. இந்த மோடை பயன்படுத்தினால், வண்ணக் குறைபாடு இல்லாதவர்களும் டிவி பார்த்தால் அவர்களுக்கு எவ்வித மாற்றமும் தெரியாது என்பதே இதன் சிறப்பம்சம். இப்போது, இந்த அம்சம் 2023ஆம் ஆண்டுகளில் வெளியான நியோ கியூஎல்இடி (Neo QLED), கியூஎல்இடி (QLED), ஓஎல்இடி (OLED), ஸ்மார்ட் மானிட்டர் (Smart Monitor) மற்றும் ஜி95எஸ்சி கேமிங் மானிட்டர் (G95SC Gaming Monitor) ஆகிய டிவிகள் மற்றும் மானிட்டர்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் வண்ணக் குறைபாடுகளை சரிசெய்யாது, அதேவேளையில் அவர்களுக்கு உடல்நலக்குறைபாடுகளை ஏற்படுத்தாது என்று சாம்சங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கிப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung SeeColors Mode On TV And Monitor To Enhance Experience For Color Blind Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X