தீயில் கருகிய கேலக்ஸி நோட் 7, இதற்குப் பொறுப்பேற்க முடியாது : சாம்சங்.!!

Written By:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 கருவி சீனாவிலும் வெடித்துச் சிதறிய சம்பவம் சீன சாம்சங் பிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் உலகின் சில நாடுகளில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 அறிமுகம் செய்யப்பட்டது. பேட்டரி பிழை காரணமாக சார்ஜ் செய்யும் போதே சில கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறியதை தொடர்ந்து அவற்றைத் திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கேலக்ஸி நோட் 7 கருவிகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் கருவிகளை வழங்கி வேறு கருவியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. பிரச்சனை இயல்பு நிலைக்குத் திரும்பும் நேரத்தில் சீனாவிலும் கேலக்ஸி நோட் 7 வெடித்த சம்பவம் சாம்சங் நிறுவனத்திற்கு புதிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பதில்

பதில்

சீன வாடிக்கையாளர் ஒருவரின் சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்துச் சிதறியதாக செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, சீனாவில் கேலக்ஸி நோட் 7 வெளிப்புற வெப்பம் காரணமாக வெடித்தது என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிழை

பிழை

சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியில் ஏற்பட்ட சிறிய பேட்டரி பிழை அந்தக் கருவியை வெடிக்கச் செய்ததால் சில நாடுகளில் கருவிகளை திரும்பப் பெறுவதாக சாம்சங் விளக்கமளித்தது. மேலும் பேட்டரி பிழை கொண்ட சுமார் 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 கருவிகளை விற்பனை செய்திருப்பதாகவும் சாம்சங் தெரிவித்துள்ளது.

முதல் முறை

முதல் முறை

சீனாவில் வெடித்த முதல் கேலக்ஸி நோட் 7 கருவி இது என்பதோடு இது குறித்து சாம்சங் விசாரணை செய்தது. இது குறித்து சாம்சங் தளத்தில் வெளியான அறிக்கையில் 'சீனாவில் கேலக்ஸி நோட் 7 வெளிப்புற வெப்பம் காரணமாகவே வெடித்தது' என சாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

மேலும் பேட்டரி தயாரிப்பு நிறுவனமான ஆம்பெரெக்ஸ் டெக்னாலஜி (ATL) நிறுவனம் இந்தச் சம்பவம் குறித்து தகவல் ஒன்றை வழங்கியுள்ளது. சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து (ATL) நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் கேலக்ஸி நோட் 7 வெடிக்கச் சீனாவில் தயாரிக்கப்பட்ட பேட்டரி மட்டும் காரணம் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.

ஆய்வு

ஆய்வு

வெடித்துச் சிதறிய கருவியை ஆய்வு செய்து பார்க்கும் போது கருவி வெடிக்க பேட்டரி காரணம் கிடையாது என்றும், வெளிப்புற வெப்பம் தான் கருவியை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என இது குறித்து வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

விளக்கம்

கடந்த வாரம் மட்டும் சீனாவில் விநியோகம் செய்யப்பட்ட சுமார் 1858 கேலக்ஸி நோட் 7 கருவிகளை அந்நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆனால் இந்தக் கருவிகள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு முன் விநியோகம் செய்யப்பட்டவை என்றும் இதன் பின் வெளியான கருவிகளில் வேறு பேட்டரி பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung says Galaxy Note 7 fire in China caused by external heat Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot