Home
News

விரைவில்.!! சாம்சங் ப்ளிப் ஸ்மார்ட்போன்..??

By Meganathan

புதியது வந்ததும் பழையதை மறக்க கூடாது என கூறுவர், இதை யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்றுவதாகவே தெரிகின்றது. முன்பு பிரபலமாக இருந்த பீச்சர் போன்கள் மீண்டும் புதிய வடிவமைப்புகளோடு சந்தையில் மீண்டும் களம் இறங்குவதை இதற்கு சாட்சி.

பீச்சர் போன்களின் வரிசையில் வந்த ப்ளிப் போன்களை ஞாபகம் இருக்கின்றதா. துவக்கத்தில் பீச்சர் போன்களை போன்ற வரவேற்பு கிடைத்தாலும் ஸ்மார்ட்போன்களின் வருகை இதற்கான மவுசை வெகுவாக குறைத்தது எனலாம். இந்நிலையில் மீண்டும் ப்ளிப் போன்களை சந்தையில் களமிறக்க பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சாம்சங்

சாம்சங்

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் அடுத்த ஆண்டு வாக்கில் ப்ளிப் போன் போன்றே காட்சியளிக்கும் கருவிகளை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

வடிவமைப்பில் ப்ளிப் போன் போன்றும் சிறப்பம்சங்களை பொருத்த வரை இன்றைய ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்து சிறப்பம்சங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடல்

மாடல்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ப்ளிப் போன் எஸ்எம்-டபுள்யூ2016 என தற்சமயம் அழைக்கப்படுகின்றது என வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டூயல் 4ஜி மற்றும் ஆண்ட்ராய்டு 5.1.1 இயங்குதளமும், 64 பிட் ஆக்டா கோர் எக்சைனோஸ் 7420 எஸ்ஓசி மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

மெமரி

மெமரி

64 ஜிபி இன்டர்னல் மெமரியும், கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படுவதோடு இரு 3.9 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியீடு

வெளியீடு

இந்த கருவி அடுத்த ஆண்டு வாக்கில் ஆசிய பகுதிகளில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung said to be making a smartphone in a flip phone body. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X