சாம்சங் எஸ்7 மற்றும் எஸ்7எட்ஜ் கருவியின் பளபளப்பான பிளாக் வேரியண்ட்.!
போட்டி நோக்கில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன்களின் புதிய பளபளப்பான கருப்பு வேரியண்ட் டிசம்பரில் அறிமுகமாகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஜெட் கருப்பு ஐபோன் 7 கருவியை மனதிற்க் கொண்டு அதற்கு போட்டியாக தென் கொரிய பன்னாட்டு குழுமம் இப்போது அதன் கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன்களின் ஒரு பளபளப்பான கருப்பு வேரியண்ட் நிறத்தில் வரும் டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு இது சார்ந்த வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது என்பது ஒருபக்கமிருக்க, இப்போது வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் நோக்கத்தில் சாம்சங் தமது உத்தியோகபூர்வ வலைத்தளமான சைனீஸ் விபோ அக்கவுண்டில் அதன் புதிய நிற மாறுபாடு கருவியின் படங்களை வெளிப்படுத்தியுள்ளது.

128 ஜிபி சேமிப்பு திறன்
வெளியான படங்களுடன் கூடுதல் தகவலாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் 128 ஜிபி சேமிப்பு திறன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஒருவேளை அடுத்த மாதம் இக்கருவி கடைகளில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு ஓனிக்ஸ்
வெளியான படங்களை கண்காணித்து பார்க்கையில் இக்கருவி பளபளப்பான கருப்பு மாறுபாடு வகையான கேலக்ஸி எஸ்7 / எஸ்7 எட்ஜ் கருவிகள் என்பதும், சந்தையில் கிடைக்கும் 'கருப்பு ஓனிக்ஸ்' பதிப்பு போல இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இருந்தாலும், நாம் பதிலாக மேல் பூச்சு, பளபளப்பான லேயர் பெயிண்ட் மூலம் பினிஷ் செய்யப்பட்டுள்ளதையும் கவனிக்க முடிகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெள்ளி நிறத்திற்கு பதிலாக கருப்பு
இந்த சாராம்சத்தில், பளபளப்பான கருப்பு நிறம் மிகவும் தெளிவான வேறுபாடு என்பதை அதன் விளிம்பில் உலா உலோக சட்டம் மூலம் காணலாம். இப்போதைக்கு அது வெள்ளி நிறத்திற்கு பதிலாக கருப்பு நிறத்தில் உள்ளன. மேலும் முக்கியமாக, இந்த ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியான வடிவமைப்பாக தெரிகிறது.

எதிர்மறை
இந்த புதிய வண்ண அறிமுகம் ஆனது சந்தையில் கேலக்ஸி எஸ்7, மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் தேவையை அதிகரிக்க முயற்சிக்கும் நோக்கத்திலும், மற்றொரு வழக்கில், வெடிப்பு சம்பவங்களில் சிக்கியுள்ள கேலக்ஸி நோட் 7 கருவியானது சாம்சங் நற்பெயருக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கும் நோக்கத்திலும் இது வெளியாகிறது என்றே எடுத்துக்கொள்ளலாம்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பவள ப்ளூ கேலக்ஸி எஸ்7
சாம்சங் ஏற்கனவே கனடாவில் ஒரு பவள ப்ளூ கேலக்ஸி எஸ்7 கருவியை கிட்டத்தட்ட ரூ. 51,083/- என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், சாம்சங் அதன் உயர் ரக சாதனங்களின் விற்பனையை பராமரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க
இணையத்தில் லீக் ஆன புதிய நோக்கியா போன் : இது செம்ம ஹாட் மச்சி..!


Click it and Unblock the Notifications