சாம்சங் நிறுவனத்தின் மெல்லிய ஸ்மார்ட்போன்கள் இவை தான்
சமீப காலமாக சாம்சங் நிறுவனம் சில அதிர்ச்சிகரமான விஷயங்களை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடையாளமாக சாம்சங் கேலக்ஸி எஸ் 5 மாடலின் விலை குறைக்கப்பட்டது அமைந்தது. இதோடு தற்சமயம் சாம்சங் நிறுவனம் புதிதாக இரு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது, இதில் புதுமையான விஷயம் என்னவென்றால் இரண்டுமே மெட்டல் மூலம் தயாரிக்கப்பட்டிருப்பது தான்.
கேலக்ஸி ஏ5 ரூ.25,500க்கும், கேலக்ஸி ஏ3 20,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுப்படுத்தப்பட்டது.
கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ3 சிறப்பம்சங்களை பாருங்கள்

வடிவமைப்பு
சாம்சங் கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ3 இந்நிறுவனத்தின் மெல்லிய ஸ்மார்ட்போனாக அமைந்துள்ளது. முழுவதும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள கேலக்ஸி ஏ3 6.7 எம்எம் மற்றும் கேலக்ஸி ஏ5 6.9 எம்எம் மெலிதாக இருக்கின்றது.
இதோடு சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்கள் ஐந்து வித வண்னங்களில் கிடைக்கின்றது.
டிஸ்ப்ளே
சாம்சங் கேலக்ஸி ஏ3, 4.5 இன்ச் qHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 540*960 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ5, 5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 720*1280 ரெசல்யூஷன் கொண்டுள்ளது.
ஓஎஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ3 என இரண்டுமே ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றன, மேலும் இவைகளில் லாலிபாப் அப்டேட் பற்றி எந்த தகவலும் இல்லை.
கேமரா
கேலக்ஸி ஏ5 13 எம்பி ப்ரைமரி கேமரா ஆட்டோபோகஸ் மற்றும் எல்ஈடி ப்ளாஷ் இருப்பதோடு 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.
கேலக்ஸி ஏ3, 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோபோகஸ் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பிராசஸர்
சாம்சங் கேலக்ஸி ஏ5, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் கொண்டுள்ளது.
கேலக்ஸி ஏ3, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளது.
மெமரி
ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொருத்த வரை இரு ஸ்மார்ட்போன்களுக்கும் 16ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
கேலக்ஸி ஏ3 ஸ்மார்ட்போனில் 1900 எம்ஏஎஹ் பேட்டரியும் கேலக்ஸி ஏ5, 2300 எம்ஏஎஹ் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் அல்ட்ரா சேவிங் மோட் ஆப்ஷனும் உள்ளது.


Click it and Unblock the Notifications








