Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
ஆப்பிள் (Apple) நிறுவனம் மிக்ஸட் ரியாலிட்டி (Mixed Reality) AR/VR ஹெட் செட் (Headset) ஒன்றை அறிமுகம் செய்யவிருப்பதாக வெகு நாட்களாக வதந்திகள் பரவி வந்தது.
சமீபத்தில் அந்த AR/VR மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட்டின் உருவாக்கத்தை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், இன்னும் ஒன்று இரண்டு மாதங்களில் அது விற்பனைக்கு வரும் என்று சமீபத்தில் தெரிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து, சாம்சங் நிறுவனமும் அதன் மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட் உருவாக்கத்தில் இறங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்கொரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் (Samsung), சமீபத்தில் நடந்த கேலக்ஸி அன்பேக் 2023 (Galaxy Unpack 2023) நிகழ்ச்சியில் அதன் புதிய மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த ஆகுமென்டெட் விசுவல் ரியாலிட்டி (Augmented Virtual Reality) ஹெட்செட்டானது, கூகுள் (Google) மற்றும் குவால்காமுடன் (Qualcomm) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சாம்சங் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (Extended Reality, XR) செயல்பாட்டுடன் வரும் இந்த வியரபில் டிவைஸானது (Wearable device), கூடிய சீக்கிரமே அறிமுகமாகும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி என்பது நம்மைச் சுற்றியுள்ளவற்றை விர்ச்சுவலாக (Virtually) பயன்படுத்திப் பார்ப்பதாகும். இந்த எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி மூலம் நம்மை சுற்றியுள்ள இடங்களை மட்டுமின்றி, புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள், இயற்கைக் காட்சிகள், நேரே சென்று எளிதில் பார்க்க முடியாத இயற்கை அழகு கூடிய இடங்கள் ஆகியவற்றையும் நிஜத்தில் இருப்பதுபோல அனுபவிக்க முடியும்.

இந்த ஹெட்செட் ஒரு வியரபில் டிவைட்ஸ் ஆகும், அதாவது அந்த ஹெட்செட்டை அணிந்து இருப்பவர் கண்களுக்கு அதன் திரை வழியாகக் காட்சிகள் காட்டப்படும். காட்சிகளில் காட்டப்பட்ட இடங்களில் நிஜமாகவே ஒருவர் இருந்து, அங்கு இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது போன்ற அனுபவத்தை இந்த ஹெட்செட் தரும். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் அந்த காட்சிகளில் காட்டப்படும் பொருட்களையும் நம்மால் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் நிஜத்தில் இருப்பது போலக் கையாள முடியும்.
இந்த எக்ஸ்டெண்டட் ரியாலிட்டியின் சிறப்பே புதிதாக காட்சிகளை க்ராஃபிக்ஸ் (Graphics) கொண்டு உருவாக்காமல், நம்மை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தையே இந்த ஹெட்செட் மூலம் அனுபவிக்க வைப்பதுதான். இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூகுள் மேப்பில் (Google map) உள்ள லைவ் வியூ நேவிகேஷன் (Live view navigation) கூறலாம்.

இந்த ஹெட்செட்டில் இருக்கும் முன் பக்க கேமராவில் படம் பிடிக்கப்பட்டு, அது உட்புறம் இருக்கும் திரையில் காட்டப்படும். மேப்பை பயன்படுத்தும் பொழுது நீங்கள் எந்த பக்கம் திரும்ப வேண்டும், எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஆரோக்களும் (arrows) கூட திரையில் தோன்றும். இந்த ஹெட்செட் உருவாக்கத்திற்காக சாம்சங் நிறுவனம் மெட்டா (Meta) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்களுடனும் கைகோர்த்து உள்ளதால், இந்த புதிய XR ஹெட்செட் ஆனது பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குவல்காம் சிப் செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த XR ஹெட்செட்டின் பிளாட்பார்ம் (platform) மற்றும் சாஃப்ட்வேரின் (Software) உருவாக்கம் வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்பிள் மற்றும் சாம்சங் XR ஹெட்செட் மோதல் மிகவும் சுவாரசியமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. இரண்டு நிறுவனங்களில் எது சிறந்த XR அனுபவத்தைத் தரப்போகிறது என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








