'பல பொருட்களுக்கு ஒற்றை-EMI'.. பலே திட்டத்தை அறிமுகம் செய்த Samsung.. இது ரொம்ப நல்ல இருக்கேப்பா..

|

Samsung நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் சுமார் 1,000 நகரங்களில் உள்ள தனது சில்லறை விற்பனை கடைகளை நிறுவனம் சிறப்பு விற்பனைக்காகத் தயார் செய்து வருகிறது. சாம்சங் சாதனங்களை வாங்குவதற்காக வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தொந்தரவில்லாத ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கு நிறுவனம் இந்த முறை புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளது.

'மை சாம்சங் மை காம்போ' திட்டம்

'மை சாம்சங் மை காம்போ' திட்டம்

பண்டிகை நேரத்தில் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை வசதியாக மாற்றுவதற்காக, சாம்சங் தனது சில்லறை கடைகளில் புதிய நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆஃப்லைன் கடைகளிலிருந்து Samsung தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், சாம்சங்கின் 'மை சாம்சங் மை காம்போ' என்ற மிரட்டலான புதிய திட்டத்தை அனுபவிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல பொருட்களுக்கு ஒரே மாத தவணை

பல பொருட்களுக்கு ஒரே மாத தவணை

Samsung நிறுவனத்தின் இந்த புதிய மை சாம்சங் மை காம்போ திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள், சில்லறை கடைகளிலிருந்து பல பொருட்களை ஒரே மாத தவணையின் கீழ் வாங்கிக்கொள்ளலாம். ஒரே ஒரு EMI இன் கீழ் பல தயாரிப்புகளை வாங்கும் திட்டத்தை சாம்சங் நிறுவனம் தற்பொழுது இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நேக்கா ஆட்டையை போட பாத்தப்பா.. டெலிவரி செய்யவேண்டிய போனை அபேஸ் செய்த Amazon டெலிவரி பார்ட்னர்..

ஒரே EMI திட்டத்தில் குறைந்த இஎம்ஐ கட்டணம் எவ்வளவு?

ஒரே EMI திட்டத்தில் குறைந்த இஎம்ஐ கட்டணம் எவ்வளவு?

இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு பொருட்களை கூட நீங்கள் ஒரே EMI இன் கீழ் வாங்கலாம். பல தயாரிப்புகளை ஒரே மாத தவணையில் கீழ் வாங்குவதற்கான குறைந்த இஎம்ஐ கட்டணங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இரண்டு தயாரிப்புகளுக்கு ரூ. 1,790 என்றும், மூன்று தயாரிப்புகளுக்கு ரூ. 2,490 என்றும், நான்கு தயாரிப்புகளுக்கு ரூ. 3,390 என்றும், மாத தவணையின் விலை பட்டியலை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விபரங்கள் தெளிவாக விவரிக்கப்படவில்லை

விபரங்கள் தெளிவாக விவரிக்கப்படவில்லை

அதன் செய்திக்குறிப்பில் சரியான திட்டங்கள் மற்றும் விபரங்களை Samsung நிறுவனம் தெளிவாக விவரிக்கவில்லை.

"நுகர்வோருக்கு மிகுந்த வசதியை வழங்குவதற்கும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் ஈ.எம்.ஐ.களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் நாங்கள் தொழில்துறையின் முதல் எளிதான நிதித் திட்டங்களை வடிவமைத்துள்ளோம்.

ATM இயந்திரத்தில் இனி ரூ. 5000-திற்கு மேல் பணம் எடுக்க கட்டணமா? எவ்வளவு என்று தெரியுமா?

சாம்சங்கின் கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை

சாம்சங்கின் கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை

எங்கள் தனித்துவமான சலுகைகள் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும்'' என்று Samsung இந்தியாவின் நுகர்வோர் மின்னணு வணிகத்தின் மூத்த துணைத் தலைவர் ராஜு புல்லன் கூறினார்.

சாம்சங்கின் கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனை அக்டோபர் 27 வரை நடைபெறுகிறது.

புதிய சலுகைகள்

புதிய சலுகைகள்

சாம்சங் நிறுவனம் தனது கிராண்ட் தீபாவளி ஃபெஸ்ட் விற்பனையின் ஒரு பகுதியாக ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபகரணங்கள், டிவிகள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற பொருள்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நிறுவனம் இன்று அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் சாம்சங் தயாரிப்புகளில் புதிய சலுகைகளையும் அறிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung's My Samsung My Combo Scheme New Single-EMI Scheme For Multiple Product Purchases : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X