Home
News

Samsung TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி! Google-ன் புதிய பாலிசி.. மார்ச் 1க்கு அப்புறம் இது வேலை செய்யாது!

சாம்சங் (Samsung) நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிகளில் இருந்து ஒரு முக்கியமான அம்சத்தை படிப்படியாக அகற்ற முடிவு செய்துள்ளது. அதென்ன அம்சம்? இனிமேல் சாம்சங் டிவி பயனர்கள் என்ன செய்ய வேண்டும்? சாம்சங்கின் இந்த முடிவிற்கும், கூகுள் நிறுவனத்திற்கு என்ன தொடர்பு? இதோ விவரங்கள்:

அதென்ன அம்சம்? சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் இருந்து.. வாய்ஸ் ஆக்டிவேட் டூல் (Voice activated tool) ஆன கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) அம்சம் மெல்ல மெல்ல அகற்றப்பட உள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (Android Smart TV) பயனர்களிடையே மிகவும் பிரபலமான இந்த கூகுள் அசிஸ்டெண்ட் அம்சம், சாம்சங் டிவிகளில் இருந்து அகற்றப்பட உள்ளது பயனர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Samsung TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி! Google-ன் புதிய பாலிசி!

சாம்சங்கின் இந்த முடிவிற்கும், கூகுள் நிறுவனத்திற்கு என்ன தொடர்பு? சாம்சங்கின் இந்த முடிவிற்கு, கூகுள் நிறுவனத்தின் புதிய கொள்கையே காரணமாகும். கூகுளின் சமீபத்திய கொள்கை மாற்றத்தை (Google Policy Change) தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் கூகுள் அசிஸ்டண்ட் அம்சம் அணுக கிடைக்காது என்று சாம்சங் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

என்னென்ன சாம்சங் டிவி மாடல்களில் இருந்து கூகுள் அசிஸ்டெண்ட் காணாமல் போகும்? சாம்சங்கின் அனைத்து 2022 ஸ்மார்ட் டிவி மாடல்கள், அனைத்து 2021 ஸ்மார்ட் டிவி மாடல்கள், 2020 8கே மற்றும் 4கே க்யூஎல்இடி டிவிகள், 2020 கிரிஸ்டல் யுஎச்டி டிவிகள் மற்றும் 2020 லைஃப்ஸ்டைல் ​​டிவிகளான ஃபிரேம், செரிஃப், டெரஸ் மற்றும் செரோ போன்ற அனைத்துமே கூகுள் அசிஸ்டண்ட்டிற்கான அணுகலை இழக்கும்.

இனிமேல் சாம்சங் டிவி பயனர்கள் என்ன செய்ய வேண்டும்? கூகுள் அசிஸ்டண்ட் அகற்றப்படவிருக்கும் நிலையில், சாம்சங் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் டிவிகளில் வாய்ஸ் அசிஸ்டெண்ட்களுக்கான மாற்று விருப்பங்களை ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறது. நல்ல விஷயம் என்னவென்றால், சாம்சங் டிவி மாடல்கள் ஆனது நிறுவனத்தின் சொந்த பிக்ஸ்பி (Bixby) மற்றும் அமேசான் அலெக்சா (Amazon Alexa) உட்பட பல வாய்ஸ் அசிஸ்டெண்ட் விருப்பங்களுடன் ப்ரீ-இன்ஸ்டால்ட்டு (Pre-installed) செய்யப்பட்டுள்ளன.

அதாவது 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதிக்கு பின்னர், சாம்சங் ஸ்மார்ட் டிவி பயனர்கள் கூகுள் அசிஸ்டெண்ட்டிற்கு பதிலாக.. அதைப்போலவே வேலை செய்யும் சாம்சங் பிக்ஸ்பி அல்லது அமேசான் அலெக்ஸ்சா ஆகிய இரண்டு விருப்பங்களில் ஒன்றை பயன்படுத்தலாம். இவ்விரண்டில் ஒன்றை உங்களுடைய சாம்சங் ஸ்மார்ட் டிவியின் டீபால்ட் வாய்ஸ் அசிஸ்டெண்ட் (Default voice assistant) ஆக மாற்றுவதற்காண விருப்பமும் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கூகுள் அசிஸ்டண்ட்டின் கீழ் அணுக கிடைக்கும் சில தனிப்பட்ட பலன்கள் உங்களுக்கு அணுக கிடைக்காது. எடுத்துக்காட்டிற்கு கூகுள் அசிஸ்டெண்ட் ஆனது பயனர்களின் கூகுள் அக்கவுண்ட் (Google Account) உடன் இணைக்கப்பட்டு இருக்கும். இது பல்வேறு சேவைகளை அணுகவும், கூகுள் தேடலின் (Google search) அடிப்படையில் நிகழ்நேர தரவு மற்றும் பதில்களை (Real-time data and answers) பெறவும் மற்றும் குரல் கட்டளைகளை பயன்படுத்தி ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களை கட்டுப்படுத்தவும் (Control smart home devices) அனுமதிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Removing Google Assistant Voice Control Feature From Its Smart TVs From March 1 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X