Samsung போன் இருக்கா.. அப்போ ஏப்.7 முதல் ரெடியா இருங்க.. One UI 7 அப்டேட்-ஐ முதலில் பெறப்போகும் 13 மாடல்கள்!
சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களை வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒன் யுஐ7 அப்டேட் (One UI 7 Update) ஆனது வெளியிடப்பட தயாராக உள்ளது. சாம்சங்கின் இந்த புதிய சாஃப்ட்வேர் அப்டேட் ஆனது பல்வேறு வகையான கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு புதிய டிசைன் மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுவர உள்ளது.
இந்த அப்டேட்டின் பீட்டா வெர்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்குக் கிடைத்தாலும், ஸ்டேபிள் பில்ட் ஆனது அடுத்த வாரம் உலகளவில் வெளியிடப்பட உள்ளது. ஒன் யுஐ7 அப்டேட் ஆனது லான்ச் டைம்லைன் என்ன? ஒன் யுஐ7 அப்டேட்-ஐ டவுன்லோட் செய்வது எப்படி? எந்தெந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு ஒன் யுஐ7 அப்டேட் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஒன் யுஐ7 அப்டேட் லான்ச் டேட் மற்றும் லான்ச் டைம்லைன்: சாம்சங் நிறுவனம் அதன் ஸ்டேபிள் ஒன் யுஐ7 அப்டேட்-ஐ ஏப்ரல் 7, 2025 முதல் வெளியிட தொடங்கும். இந்த அப்டேட்-ஐ பெறும் முதல் ஸ்மார்ட்போன்களாக, கேலக்ஸி எஸ்24 சீரீஸ் இருக்கும். அதை தொடர்ந்து மற்ற பிளாக்ஷிப் மாடல்களுக்கு ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும். பயனர்கள் தங்கள் டிவைஸ் மாடல் மற்றும் பிராந்தியத்தை பொறுத்து படிப்படியான வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.
ஒன் யுஐ7 அப்டேட்-ஐ எவ்வாறு பதிவிறக்குவது? உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஒன் யுஐ7 அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, செட்டிங்ஸ் > சாஃப்ட்வேர் அப்டேட் > டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் என்பதற்கு செல்லவும். உங்கள் மாடலுக்கு அப்டேட் வந்து இருந்தால், அது தானாகவே பதிவிறக்க தொடங்கும். அப்டேட் செய்ய தொடங்குவதற்கு முன் உங்கள் ஸ்மார்ட்போன் வைஃபை உடன் இணைக்கப்பட்டு, போதுமான பேட்டரி அள்வு கொண்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
ஒன் யுஐ 7 அப்டேட்-க்கு தகுதியான சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களின் பட்டியல்: முதல் கட்டமாக எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு ஒன் யுஐ 7 அப்டேட் கிடைக்கும் என்கிற பட்டியலை சாம்சங் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதோ அந்த பட்டியல்:
- சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24)
- சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus)
- சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra)
- சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE)
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23)
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Samsung Galaxy S23 Plus)
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra)
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE)
- சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55)
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6)
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6)
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5)
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5)
- சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 (Samsung Galaxy Tab S10)
- சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 சீரீஸ் (Samsung Galaxy Tab S9 Series)
சுவாரஸ்யமாக, இந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி ஏ55 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ35 (Samsung Galaxy A35) இடம் பெறவில்லை. சாம்சங் நிறுவனம் பின்னர் இதை சேர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ06 5ஜி போன்ற சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே ஒன் யுஐ 7 அவுட் ஆப் பாக்ஸ் உடன் அனுப்பப்படுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications