கழற்றி விடப்பட்ட கேலக்ஸி நோட்7 : காரணம் என்னனு தெரியுமா.??

By Meganathan
|

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட்7 உலகெங்கும் ஆகஸ்டு 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கொரியாவில் மட்டும் சுமார் 400,000 நோட் 7 கருவிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கேலக்ஸி நோட் 7 கருவிகளை சாம்சங் நிறுவனம் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

சார்ஜ் செய்யும் போது சில கருவிகள் வெடித்துச் சிதறியதை தொடர்ந்து கேலக்ஸி நோட் 7 கருவிகள் திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி நோட் 7 கருவிகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் கருவிகளை வழங்கி வேறு கருவியை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்:

சாம்சங்:

சாம்சங் வரலாற்றில் ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிட்ட கருவிகளை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும். பயனர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரே காரணத்திற்காக சாம்சங் நிறுவனம் இந்த முடிவினை எடுத்திருக்கின்றது.

நாடுகள்:

நாடுகள்:

தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பத்து நாடுகளில் கேலக்ஸி நோட் 7 கருவிகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன. சாம்சங் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பேட்டரி தயாரிப்பாளர்களின் பிழை காரணமாக பேட்டரி வெடித்தது தெரியவந்திருக்கின்றது.

பிழை:

பிழை:

தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட சிறிய பிழை கண்டறிய சிரமமாக இருந்தது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவியை சார்ஜ் செய்யும் போது வெடித்துச் சிதறியதாக பயனர்கள் சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களோடு பதிவு செய்து வருகின்றனர்.

தென்கொரியா:

தென்கொரியா:

தென்கொரியாவில் மட்டும் சுமார் 35 கருவிகள் வெடித்திருப்பதாகவும் இது போன்ற சம்பவம் மற்ற நாடுகளிலும் நடைபெற்றிருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

விற்பனை:

விற்பனை:

கேலக்ஸி கருவிகள் வெடித்துச் சிதறியதில் எவ்வித காயங்களும் பதிவு செய்யப்படவில்லை. தற்சமயம் வரை 10 லட்சத்திற்கும் அதிகமான கேலக்ஸி நோட் 7 கருவிகளை விற்பனை செய்திருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

கேலக்ஸி நோட் 7:

கேலக்ஸி நோட் 7:

மொத்தமாக 2.5 மில்லியன் கேலக்ஸி நோட் 7 கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவையும் சரி செய்யப்படும் என சாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கருவிகளைச் சரி செய்ய இரண்டு வாரங்கள் ஆகும் என அந்நிறுவனம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

சீனாவில் விற்பனை செய்யப்பட்ட கருவிகள் வேறு பேட்டரியை பயன்படுத்தியதால் அங்கு விற்பனை செய்யப்பட்ட கருவிகளில் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung recalled Galaxy Note 7 after battery explosions Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X