Samsung செய்த சத்தியம்.! சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் குஷி.! இனி எல்லாமே சூப்பர் பாஸ்ட் தான்.!
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் (Samsung) நிறுவனம் இப்போது அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக ஒரு சூப்பர் மேட்டரை அறிவித்துள்ளது. வெளிப்படையாகச் சொல்லப் போனால், சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு புதிய வாக்குறுதியை "சத்தியமாக" நிறைவேற்றும் என்று அறிவித்துள்ளது.

Samsung ஸ்மார்ட்போன் பயனர்கள் செம குஷி
இதனால், Samsung ஸ்மார்ட்போன் பயனர்கள் இப்போது செம குஷியில் உள்ளனர். குறிப்பாக, இது போன்ற சத்தியத்தைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறுவது வழக்கம் தான் என்றாலும், சாம்சங் இதைச் செய்து காட்டியுள்ளது என்பதே இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக இருக்கிறது. சரி, இப்போது சாம்சங் என்ன செய்துள்ளது என்று பார்க்கலாம்.

சூப்பர் பாஸ்ட் அப்டேட்னா அது சாம்சங் தானா?
கூகிள் (Google) நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) வெர்ஷனை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியிட்டது. மேலும், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையாகக் கொண்ட சாம்சங்கின் முதல் ஒன் யுஐ 5 புதுப்பிப்பு (One UI 5 update) கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மற்றும் பத்து நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 24 ஆம் தேதியே சாம்சங் கேலக்ஸி எஸ் 22 குடும்பத்திற்கு அனுப்பப்பட்டது.

இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வேகமாக வெளியிடப்பட்ட அப்டேட்.!
அந்த கட்டத்தில் இருந்து, கொரிய நிறுவனம் இன்று வரை எண்ணற்ற சாதனங்களைப் புதுப்பித்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், One UI 5 இன் வெளியீடு இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வேகமாக நடத்தப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. சாம்சங் நிறுவனத்தின் இந்த முயற்சி பாராட்டிற்குரியது.

பரப்பாசம் பார்க்காத அப்டேட் ரோல் அவுட்.!
மேலும் கொரிய நிறுவனம் இந்த ஆண்டு ஒரு சில ஃபிளாக்ஷிப்களுடன் மட்டும் அதன் அப்டேட்டை ஒட்டிக் கொள்ளாமல், முடிந்தவரைப் பல சாதனங்களைக் கவர் செய்த முயன்றுள்ளது. இது உண்மையில் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. சாப்ட்வெர் அப்டேட் மீது நிறுவனம் எவ்வளவு அதிக கவனம் செலுத்துகிறது என்பதை இது நிரூபிக்கிறது.

இன்னும் வேகமாக அப்டேட்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.!
அடுத்த ஆண்டு, அதாவது வருகிற 2023க்கான அப்டேட்களை நிறுவனம் இன்னும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறது. இதற்காக நிறுவனம் இன்னும் வேகமாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் இன்று அதன் கொரிய இடுகை பக்கத்தில் இரு புதிய பதிவை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிறுவனம் இன்னும் வேகமாக அப்டேட்களை வெளியிடும் என்று சத்தியம் செய்துள்ளது.

மற்ற பிராண்டுகளை விட சிறப்பாக செயல்படுகிறது Samsung!
இது உண்மையான, உறுதியான வாக்குறுதி அல்ல என்று சிலருக்குத் தோன்றினாலும், நிறுவனம் என்ன சொல்கிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆண்டு நாம் பார்த்தவற்றிலிருந்து சாம்சங்கின் சாப்ட்வேர் அப்டேட்கள் மற்ற பிராண்டுகளை விட மிகவும் வேகமாக வெளியிடப்பட்டுள்ளது.

தரமான நிறுவனம் என்று பல முறை நிரூபித்த Samsung
சாம்சங் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முடிந்த வரை வேகமாக செயல்பட்டு வருகிறது என்பதை நிறுவனம் பல முறை கடந்த ஆண்டுகளில் நிரூபித்துள்ளது. இதேபோல், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 உடன், சாம்சங் கேலக்ஸி ஏ52s 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ32 ஆகியவை சாப்ட்வேர் அப்டேட்டை பெறப் பட்டியலில் வரிசையில் உள்ளது.

சரியான நேரத்தில் சாப்ட்வேர் அப்டேட்டை வழங்குகிறது சாம்சங்
இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 13 உடன் ஒன் யுஐ 5ஐ இந்த ஆண்டின் இறுதிக்குள் பெறும் வரிசையில் உள்ளன என்பதை சாம்சங் கூடுதலாக வெளிப்படுத்தியது. உலகம் முழுவதும் உள்ள Samsung Galaxy S20 மற்றும் Samsung Note20 குடும்பங்களுக்கு புதிய சாப்ட்வேர் அப்டேட்டின் பரவலான வெளியீடு இந்த மாத இறுதிக்குள் நடக்கும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் சாப்ட்வேர் அப்டேட்டை சாம்சங் வழங்குவதால், அதன் வாடிக்கையாளர்கள் குஷியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications