2012ன் இறுதிக் காலாண்டில் 60 மில்லியன் ஸ்மார்ட்போன்ளை விற்க சாம்சங் இலக்கு

Posted By: Staff
2012ன் இறுதிக் காலாண்டில் 60 மில்லியன் ஸ்மார்ட்போன்ளை விற்க சாம்சங் இலக்கு

இந்த ஆண்டு  மொபைல் சாதங்களை அதிகம் விற்பனை செய்ததில் சாம்சங் நிறுவனம் முன்னனியில் இருக்கிறது. குறிப்பாக சாம்சங்கின் கேலக்ஸி எஸ்3 மற்றும் கேலக்ஸி நோட்2 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்த ஆண்டு விற்பனையில் சாதனை படைத்தன. அதன் மூலம் சாம்சங் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் காலாண்டில் மட்டும் 60 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக யோன்ஹாப் என்ற ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தனது போட்டியாளரான ஆப்பிளைப் பின்னுக்குத் தள்ள கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறது சாம்சங்.

யுபிஎஸ் என்று நிதி நிறுவனம், இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பருக்கிடையிலான காலாண்டில் மட்டும் 61.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் என்று ஆருடம் கூறியிருக்கிறது. இந்த இலக்கு சாம்சங்கின் கடந்த ஆண்டு விற்பனையான 58 மில்லியனைவிட அதிகமாகும். மேலும் சாம்சங்கின் இந்த இறுதி காலாண்டு விற்பனை 63 மில்லியனையும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிக்கோலாஸ் கவுடியோஸ் என்ற யுபிஎஸின் ஆய்வாளர், கேலக்ஸி நோட்2 வெளிவந்த 5 வாரங்களில் 3 மில்லியன் அளவிற்கு விற்பனை ஆகியதாக தெரிவித்திருக்கிறார். அதனால் இந்த இறுதி காலாண்டில் மட்டும் 7 மில்லியன் கேலக்ஸி நோட் விற்பனையாகும் என்று அறிதியிட்டு கூறுகிறார்.

மேலும் கேலக்ஸி நோட்2, ஆப்பிளின் ஐபோன்5ன் விற்பனையை பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸ் எஸ்3 போன் அக்டோபர் மாதம் மட்டும் 5.5 மில்லியன் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சாம்சங் தனது விற்பனை இலக்கை இந்த இறுதி காலாண்டில் எட்டிவிடும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்