Samsung எப்போவும் கிங்கு தான்.. 10 வருட வாரன்டி.. சூப்பர் ஸ்பீட் 1TB மெமரி கார்டு விற்பனை.. விலை என்ன?
சாம்சங் (Samsung) நிறுவனம் முதல் முறையாக உலக சந்தையில் இரண்டு வகையான 1TB மைக்ரோஎஸ்டி கார்டு (microSD card) கருவிகளை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த மைக்ரோஎஸ்டி கார்டுகள் வழக்கமான மெமரி கார்டுகளை விட அதிவேகமானது மற்றும் அதிக திறனுடையது என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய மைக்ரோஎஸ்டி கார்டுகளை சாம்சங் நிறுவனம் இப்போது சாம்சங் ப்ரோ பிளஸ் (Samsung PRO Plus) மற்றும் சாம்சங் ஈவோ செலக்ட் (Samsung EVO Select) ஆகிய இரண்டு மாடல்களை 1TB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய மைக்ரோஎஸ்டி கார்டுகள் சாம்சங் நிறுவனத்தின் யுடிளைஸ் 8வது ஜெனெரேஷன் சாம்சங் V-NAND (V8) டெக்னாலஜி தொழில்நுட்பத்துடன் சூப்பர் பெர்பார்மென்ஸ் மெமரி கார்டாக வெளிவந்துள்ளது. இந்த புதிய 1TB மெமரி கார்டுகள் (1TB Memeory card) 4,00,000 4K UHD படங்களை சேவ் செய்ய கூடியது என்று சாம்சங் தெரிவித்துள்ளது. அதேபோல், 45 கேமிங் கன்சோல் கேம்ஸ்களை ஸ்டோர் செய்யக்கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.

சாம்சங் ப்ரோ பிளஸ் மற்றும் சாம்சங் ஈவோ செலக்ட் (Samsung PRO Plus and Samsung EVO Select):
இந்த புதிய சாம்சங் ப்ரோ பிளஸ் (Samsung PRO Plus) மற்றும் சாம்சங் ஈவோ செலக்ட் (Samsung EVO Select) கார்டுகளை நீங்கள் ஸ்மார்ட்போன், ஆக்ஷன் கேமராஸ், ட்ரோன் மற்றும் கையடக்க கேமிங் கன்சோல்ஸ் போன்ற சாதனங்களில் இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கார்டுகளில், சாம்சங் ப்ரோ பிளஸ் கார்டு ஒரு வினாடிக்கு 180 மெகாபைட்ஸ் (180 megabytes per second) வேகத்தில் டேட்டாவை டிரான்ஸ்பர் செய்கிறது.
மறுபுறம், சாம்சங் ஈவோ செலக்ட் 1TB மெமரி கார்டு ஒரு வினாடிக்கு 160 மெகாபைட்ஸ் வேகத்தில் டேட்டாவை டிரான்ஸ்பர் ( transfer speeds of up to 160MB/s) செய்கிறது. இதில் சாம்சங் ப்ரோ பிளஸ் கார்டு, UHD மற்றும் FHD உள்ளடக்கத்திற்கு ஏற்றது. இது உயர்தர 4K UHD வீடியோ பதிவுக்காக UHS ஸ்பீடு கிரேடு 3 (U3) மற்றும் V30 வீடியோ வேக வகுப்பை ஆதரிக்கிறது.
திறமையான ஆப்ஸ் நிறுவல் மற்றும் பயன்பாட்டிற்கான A2 பயன்பாட்டு செயல்திறன் இதில் அடங்கும். அதேபோல், இதுவும் U3 ஸ்பீடு கிரேடு, V30 வீடியோ ஸ்பீட் கிளாஸ், இவை நீர், எக்ஸ்-ரே, உயர் வெப்பம் மற்றும் காந்த ஈர்ப்பு போன்ற விஷங்களில் இருந்து மிகவும் பாதுகாப்பானது என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார்டு இப்போது 128GB, 256GB, and 512GB போன்ற விருப்பங்களில் வருகிறது.
சாம்சங் ஈவோ செலக்ட் 64GB ஸ்டோரேஜ் முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை விபரங்களை இப்போது பார்க்கலாம்.
1. சாம்சங் ப்ரோ பிளஸ் மைக்ரோஎஸ்டி கார்டு விலை (PRO Plus microSD Card Price):
- 128GB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ. 2,175
- 256GB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ. 3,345
- 512GB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ. 6,360
- 1TB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ. 10,045
2. சாம்சங் ஈவோ செலக்ட் மைக்ரோஎஸ்டி கார்டுஸ் (EVO Select microSD Cards):
- 64GB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ.1,255
- 128GB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ. 1,590
- 256GB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ. 2,090
- 512GB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ. 3,765
- 1TB மெமரி கார்டு விலை தோராயமாக ரூ. 8,370
இந்த கார்டுகள் எல்லாம் 10 வருடம் வாரன்டியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








