ரூ.9000க்கு கீழ் கிடைக்கும் சாம்சங், ஒனிடா, வேர்ல்பூல் Washing Machines.. தீபாவளி ஆஃபர் பாஸ்!

|

வாஷிங் மெஷின் என்பது பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது. என்ன சொல்றீங்க உங்க வீட்டில் வாஷிங் மெஷின் இல்லையா என்று ஆச்சரியத்துடன் கேட்கும் காலம் வந்து விட்டது. வாஷிங் மெஷின்கள் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகி விட்டது. காரணம் அதன் தேவை அவசியமாகவும் அதிகமாகவும் இருப்பது தான். குறிப்பாக மழை காலத்தில் வாஷிங் மெஷின் தேவை அளப்பரியதாக இருக்கிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

ஒரு வாஷிங் மெஷின் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். வாஷிங் மெஷின் பிராண்ட் என்னவென்று முதலில் கவனிக்க வேண்டும்.

பின் அதன் கெபாசிட்டி, மின் நுகர்வு, டிஸ்ப்ளே ரகம், வாஷிங் ப்ரோகிராம்கள், ட்ரம் சைஸ் உள்ளிட்டவைகளையும் கவனிப்பது அவசியம்.

ஆரம்பத்தில் உச்ச விலையில் இருந்த வாஷிங் மெஷின்கள் தற்போது சொர்ப்ப விலையில் கிடைக்கிறது.

ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் வாஷிங் மெஷின்கள்

ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் வாஷிங் மெஷின்கள்

பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதற்கு வாஷிங் மெஷின்கள் விதிவிலக்கு அல்ல.

சாம்சங், ஒனிடா, வேர்ல்பூல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வாஷிங் மெஷின்கள் ரூ.10,000க்கு கீழ் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டுக்கு ஏதேனும் புதிய எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு வாஷிங் மெஷின் சிறந்த தேர்வாக இருக்கும்.

சாம்சங் 6.5 kg வாஷிங் மெஷின்

சாம்சங் 6.5 kg வாஷிங் மெஷின்

Samsung 6.5 kg வாஷிங் மெஷின் ஆனது செமி ஆட்டோமேட்டிக் டாப் லோட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் ஸ்பின் வேகம் 1350 ஆர்பிஎம் ஆகும். இதில் 2 வாஷிங் ப்ரோகிராம்கள் இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த வாஷிங் மெஷின் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது.

கூடுதலாக வங்கி சலுகைகளும் இந்த வாஷிங் மெஷின்களுக்கு வழங்கப்படுகிறது. மாதம் ரூ.791 என்ற வீதத்தில் இஎம்ஐ செலுத்தியும் இந்த வாஷிங் மெஷினை வாங்கலாம்.

தள்ளுபடி விலையில் சாம்சங் வாஷிங் மெஷின்

தள்ளுபடி விலையில் சாம்சங் வாஷிங் மெஷின்

இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.12500 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இது ரூ.9490 என கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த வாஷிங் மெஷினுக்கு 24 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.

வேர்ல்பூல் 7 kg வாஷிங் மெஷின்

வேர்ல்பூல் 7 kg வாஷிங் மெஷின்

Whirlpool 7 kg வாஷிங் மெஷின் ஆனது டர்போ ஸ்க்ரப் டெக்னாலஜி செமி ஆட்டோமேட்டிக் டாப் லோட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன் ஸ்பின் ஸ்பீட் 1450 ஆர்பிஎம் ஆகும். இதில் 3 வாஷிங் ப்ரோகிராம் இருக்கிறது. இந்த வாஷிங் மெஷின் 5 ஸ்டார் ரேட்டிங்கை கொண்டிருக்கிறது. இதன் கொள்ளளவு 7 கிலோ ஆகும். இதில் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆதரவு இல்லை என்றாலும் விலைக்கேற்ற அம்சங்கள் தாராளமாக இதில் இருக்கிறது. ரிவ்யூ அடிப்படையிலும் இந்த வாஷிங் மெஷின் நல்ல மதிப்பெண்ணை பெற்றிருக்கிறது.

தள்ளுபடியுடன் வேர்ல்பூல் வாஷிங் மெஷின்

இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.11,250 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.9,990 என கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் 11 சதவீத தள்ளுபடியுடன் இந்த வாஷிங் மெஷின் கிடைக்கிறது.

ஒனிடா 8 kg வாஷிங் மெஷின்

ஒனிடா 8 kg வாஷிங் மெஷின்

ONIDA 8 kg வாஷிங் மெஷின் ஆனது இன்-பில்ட் பேஸ்கட் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த வாஷிங் மெஷினின் ஸ்பின் வேகம் 1450 ஆர்பிஎம் ஆகும். இதில் இரண்டு வாஷிங் ப்ரோகிராம்கள் இருக்கிறது. இந்த வாஷிங் மெஷினில் விலைக்கேற்ற அம்சங்கள் நிறைய இருக்கிறது. பரிமாற்ற சலுகையும் இந்த வாஷிங் மெஷினுக்கு வழங்கப்படுகிறது.

தள்ளுபடியுடன் ஒனிடா வாஷிங் மெஷின்

இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.13,670 என விற்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.9490 என கிடைக்கிறது. இந்த வாஷிங் மெஷினை 30 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம்.

மார்க்யூ 8.5 கிலோ வாஷிங் மெஷின்

மார்க்யூ 8.5 கிலோ வாஷிங் மெஷின்

MarQ 8.5 kg வாஷிங் மெஷின் ஆனது ரூ.14,150 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இது 36 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் மார்க்யூ வாஷிங் மெஷின் ரூ.8990 என கிடைக்கிறது. இந்த விலைப்பிரிவில் 8.5 கிலோ என்ற அதிக கொள்ளளவு உடன் கிடைக்கும் வாஷிங் மெஷின் இது. செமி ஆட்டோமேட்டிக் டாப் லோட் ஆதரவு இதில் இருக்கிறது. இதன் ஸ்பின் வேகம் 1400 ஆர்பிஎம் ஆகும். 3 வாஷிங் ப்ரோகிராம்கள் உடன் இந்த வாஷிங் மெஷின் கிடைக்கிறது. 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது இந்த வாஷிங் மெஷின்.

Best Mobiles in India

English summary
Samsung, Onida, Whirlpool Washing Machine Available at Under Rs.9000: Diwali Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X