சென்னை விமான நிலையத்தில் வெடித்துச் சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்.?

Written By:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 2 ஸ்மார்ட்போன் சென்னை விமான நிலையத்தின் விமானம் ஒன்றில் வெடித்துச் சிதறியதாத செய்திகள் வெளியாகியுள்ளன. கருவியில் இருந்து திடீரென புகை வெளியானதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த பணியாளர் தீயணைப்பு உபகரணங்களைக் கொண்டு தீயை அணைத்ததாகவும் கூறப்படுகின்றது.

சென்னை விமான நிலையத்தில் வெடித்துச் சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்.?

ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறுவதால் கருவிகளை திரும்பப் பெறுவதாக சதாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் தனது கருவிகளை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியினை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

விமானத்தில் சாம்சங் கருவி வெடித்துச் சிதறிய சம்பவத்தைத் தொடர்ந்து விமான பயணிகள் விமானத்தில் இருக்கும் போது தங்களது கருவிகளை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புகைப்படம் : டைம்ஸ் நௌ

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
Samsung Note 2 catches fire in Chennai-bound plane Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot