Home
News

ஜூன் போயி.. ஜூலை வரட்டும்.. Samsung போட்டுள்ள புது ஸ்கெட்ச்.. Galaxy Ring முதல் Galaxy Z Fold 6 Ultra வரை!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் (Galaxy Unpacked Event) என்னென்ன புதிய தயாரிப்புகள் அறிமுகமாகும் என்கிற சில 'ஸ்ட்ராங்' ஆன யூகங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் இந்நிகழ்வு சரியாக எந்த தேதியில் நடக்கும் என்கிற தகவல் மட்டும் பிடிபடாமலேயே இருந்தது. தற்போது அது குறித்த "நம்பகமான" தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிகழ்வு எப்போது நடக்கும்? இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் என்னென்ன புதிய ஸ்மார்ட்போன்களை, புதிய கேட்ஜெட்களை அறிமுகம் செய்யும்? இதோ விவரங்கள்:

அடுத்த கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட்டின் தேதி குறித்து சாம்சங் நிறுவனம் இன்னுமே வாயே திறக்காத நிலைப்பாட்டில் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஈவான் பிளாஸ் வழியாக கிடைத்த தகவலின்படி அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வானது ஜூலை 10, 2024 அன்று நடைபெறும். இந்நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு 2024 ஒலிம்பிக் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் தென் கொரியாவிற்கு பதிலாக பாரிஸில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Galaxy Unpacked Event 2024 தேதி.. Samsung போட்டுள்ள புது ஸ்கெட்ச்!

ஆக சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் நியூ ஜெனெரஷன் போல்டபிள், பிளிப் போன்கள் மற்றும் வியரபிள்கள் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வில் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 (Galaxy Z Fold 6), கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 (Galaxy Z Flip 6), கேலக்ஸி வாட்ச் 7 (Galaxy Watch 7), கேலக்ஸி பட்ஸ் 3 (Galaxy Buds 3) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான அறிமுகங்கள் ஆன சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 உடன் சேர்த்து 3வது மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு, கிளாம்ஷெல்-பாணியில் (Clamshell-style) மடங்கக்கூடிய கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 உடன் சேர்த்து புக்-ஸ்டைல் பாணியில் (Book-style) மடங்கக்கூடிய மடிக்கக்கூடிய 2 ​​கேலக்ஸி இசட் ஃபோல்ட் மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதில் ஒன்று கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 அல்ட்ரா (Galaxy Z Fold 6 Ultra) என்று அழைக்கப்படலாம். இது டாப் க்ளாஸ் ஹார்டுவேர் அப்கிரேட்களுடன் சாம்சங் நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ரிங் (Galaxy Ring) ஒன்றையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் ரிங் ஆன கேலக்ஸி ரிங் ஆனது வயர்லெஸ் இயர்பட்களை போன்ற சார்ஜிங் முறையை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது இது பிரத்யேக கேரிங் கேஸ் உடன் வரும்; அதுவே கேலக்ஸி ரிங்கிற்கான சார்ஜிங் கேஸ் ஆகவும் செயல்படும் என்பது போல் தெரிகிறது.

இதே கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், சாம்சங் நிறுவனமானது எக்ஸ்ஆர் (XR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அதன் முதல் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் குறித்த அப்டேட்களை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சாம்சங் கேலக்ஸி எக்ஸ்ஆர் (Samsung Galaxy XR) என்று அழைக்கப்படலாம்; இது ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹைபிரிட் ரியாலிட்டி ஹெட்செட்டின் (Apple Vision Pro mixed reality headset) காப்பியாக அல்லது போட்டியாக இருக்கலாம்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கேலக்ஸி எஸ்23 எப்இ (Galaxy S23 FE) மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன கேலக்ஸி எஸ்24 எப்இ இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. இது ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் ஹோல் பஞ்ச் டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இது கேலக்ஸி எஸ்24 மாடலின் டோன்டு-டவுன் வெர்ஷனாக இருக்கும்!

Best Mobiles in India

English summary
Samsung Next Galaxy Unpacked Event 2024 Date July10 Galaxy Z Fold 6 Galaxy Z Flip 6 Galaxy Ring
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X