ஆர்டர் தெறிக்குமே.. Samsung-ன் 162 கிராம் Slim மாடல்.. இந்திய அறிமுகம் கன்ஃபார்ம்.. எப்போது? என்ன விலை?
இந்தியாவில், சாம்சங் நிறுவனம் அதன் புதிய அல்ட்ரா ஸ்லிம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை நாம் எதிர்பார்ப்பதை விட கூடிய விரைவில் அறிமுகம் செய்யலாம் என்பதை மேலுமொரு லீக் உறுதிப்படுத்தி உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு (Samsung Galaxy S25 Edge India Launch) குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? முன்னதாக வெளியான சில அறிக்கைகளில் ஒன்றில், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனை 2025 ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் அறிமுகம் செய்யும் என்று கூறியது.

தற்போது பிரபல டிப்ஸ்டர் ஆன அபிஷேக் யாதவ், சாம்சங் நிறுவனம் இந்த அல்ட்ரா ஸ்லிம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்த ஸ்மார்ட்போனின் பிராந்திய மற்றும் உலகளாவிய வெளியீடு ஒரே தேதியில் நடக்கலாம். கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் அது இந்திய சான்றிதழ் BIS-இல் காணப்பட்ட பின்னஏ இந்த லீக் வெளிவந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த வார தொடக்கத்தில், கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள், ஸ்டோரேஜ் மற்றும் ஐரோப்பிய விலை நிர்ணயம் ஆகிய விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆனதும் இங்கே குறிப்பிடத்தக்கது அதன்படி கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் டைட்டானியம் ஐஸிப்ளூ (Titanium Icyblue), டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் டைட்டானியம் ஜெட்பிளாக் (Titanium Jetblack) ஆகிய 3 கலர்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது 256GB மற்றும் 512GB விருப்பங்களை உள்ளடக்கிய இரண்டுஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படலாம். இரண்டு வகைகளும் 12GB RAM உடன் இணைக்கப்படலாம். கேலக்ஸி எஸ்25 சீரீஸின் முதன்மை தர மாடல் என்பதால், எஸ்25 எட்ஜ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் பொருத்தப்பட அதிக வாய்ப்புள்ளது .
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- டூயல் சிம் ஆதரவு
- 5.84 மிமீ தடிமன்
- சுமார் 162 கிராம் எடை
- 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 6.6-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 3,900mAh பேட்டரி
- 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பேஸிக் இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை சுமார் ரூ.80,000 - ரூ,90,000 க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை விவரங்கள் வெளியீட்டின் போது அறிவிக்கப்படும்.
சாம்சங் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை சாம்சங் இந்தியா (Samsung India) சமீபத்தில் பதிவிட்ட "டார்க், போல்ட், அல்ட்ரா" (Dark. Bold. Ultra) என்கிற டீஸர் போட்டோவை எக்ஸ் தளத்தில் இருந்து டெலிட் செய்துள்ளது. இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் புதிய டார்க் கலர் ஆப்ஷன் அறிமுகமாகும் என்கிற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அதன் கேலக்ஸ் எஸ்25 அல்ட்ராவை டைட்டானியம் பிளாக் (Titanium Black) கலர் ஆப்ஷனில் விற்பனை செய்கிறது. ஆகையால் வரவிருக்கும் புதிய டார்க் கலர் ஆப்ஷன் ஆனது இன்னும் டார்க் ஆன பிளாக் கலரையும் மற்றும் பேக் பேனலில் பளபளப்பான பினிஷையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "இப்போதைக்கு" அப்படி எதுவும் நடக்காது என்பது போல் தெரிகிறது.


Click it and Unblock the Notifications








