வாடகைக்கு Samsung மொபைல்கள்.. பிரீமியம் Galaxy போன்களுக்கு TOLET போர்டு போட்டாச்சு.. லட்ச ரூபாய் போன்களுமா?
சாம்சங் (Samsung) நிறுவனம் விரைவில் அதன் லட்ச ரூபாய் பிரீமியம் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வாடகைக்கு (rent premium Samsung Galaxy smartphones) வழங்கும் புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னது? பிரீமியம் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் வாடகைக்கு வழங்க போகிறதா? இது உண்மையா? என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பும் அனைவருக்குமே இந்த செய்தி ஒரு ஹேப்பி நியூஸ் ஆக மாறப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. சாம்சங் போனுக்கு வாடகை (rent Samsung smartphones) என்றால், அது எவ்வளவு இருக்கும்?
சாம்சங் நிறுவனம் அதன் புதிய ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence) அம்சத்தை பயன்படுத்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏஐ சந்தா திட்டங்களை (Samsung Galaxy AI Subscriptions) அறிமுகம் செய்துள்ளது. இந்த் புதிய அம்சத்தை நேரடியாக வெறும் ஏஐ (AI) பயன்பாட்டிற்கான சந்தா கட்டணமாக வசூலிக்காமல், சாம்சங் நிறுவனம் இத்துடன் பிரீமியம் ஸ்மார்ட்போன்களையும் (Samsung premium smartphones) சேர்த்து வழங்கி, வாடகை வசூலிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது.

பிரீமியம் Galaxy போன்களுக்கு TOLET போர்டு போட்டாச்சு.. 2025-ல் வாடகைக்கு Samsung மொபைல்கள்:
ஆம், புதிய AI சந்தா திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, சாம்சங் நிறுவனம் அதன் பிரீமியம் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை நேரடியாக வாங்குவதற்கு பதிலாக வாடகைக்கு எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த வித்தியாசமான வாடகை ஸ்மார்ட்போன் சந்தா (Samsung smartphone rental service subscription) சேவை பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு, இதே போன்ற மாதாந்திர சந்தா திட்டங்களை சாம்சங் நிறுவனம் அதன் வீட்டு உபயோகப் பொருட்களுக்காக (household appliances) வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2023 இல் அறிமுகம் செய்யப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து, சாம்சங் நிறுவனம் தற்போது அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன் சாதனங்களையும் வாடகைக்கு (Samsung premium mobiles for rent) வழங்க முன்வந்துள்ளது என்று கூறப்படுகிறது. உண்மையை சொல்ல போனால், இதுவொரு நல்ல வியாபார யுக்தி தான்.
லட்ச ரூபாய்க்கு வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) கூட வாடகைக்கு கிடைக்குமா?
சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட தயாராக இருக்கும் சாதனம் என்றால், அது சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடல் தான். இதன் விலை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தோராயமாக ரூ. 1,29,999 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அல்லது இந்த போனின் விலை 1, 59,999 வரை கூட செல்லலாம் என்றும் பேசப்படுகிறது.
இத்தகைய காஸ்ட்லீ ஸ்மார்ட்போனை நிச்சயம் எல்லோராலும் மொத்த கட்டணத்தை செலுத்தி வாங்க இயலாது. இதை உணர்ந்த சாம்சங் நிறுவனம் தற்போது அதன் விலை உயர்ந்த பிரீமியம் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வாடைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போன்களை வாடகைக்கு எடுக்கும் பொழுது AI சந்தா இலவசமாக (FREE) வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது மாதாந்திர வாடகையா? அல்லது வருட வாடகையா? எப்போது இந்த ரெண்டல் திட்டம் அறிமுகம்?
மொத்தமாக ஒரே செட்டில்மெண்டில் பிரீமியம் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் AI சந்தாவிற்கான தனி வாடகை கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக சாம்சங் நிறுவனம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதேபோல், இது மாதாந்திர சந்தாவா, அல்லது 3 மாத சந்தாவா, 6 மாத சந்தாவா அல்லது 1 வருட சந்தாவாக வெளிவருமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
ஜனவரி 22, 2025 ஆம் தேதி நடைபெறும் சாம்சங் கேலக்ஸி அன்பாக்டு ஈவென்ட் 2025 (Galaxy Unpacked Event 2025) நிகழ்வின் பொழுது இந்த திட்டத்தை பற்றி சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








