இது டிவியா இல்ல தியேட்டர் திரையா?- 8கே டிஸ்ப்ளே, 6.2.4 சேனல் ஆடியோ உடன் சாம்சங் நியோ க்யூஎல்இடி டிவி!

|

சாம்சங் நியோ க்யூ எல்இடி 8கே மற்றும் நியோ க்யூ எல்இடி டிவிகள் ஆனது 85 இன்ச் டிஸ்ப்ளே அளவுகள் ஆதரவோடு வழங்குகின்றன. இந்த ஸ்மார்ட் டிவிகள் ஆனது சாம்சங்கின் சிக்னேச்சர் இன்பினிட்டி ஒன் டிசைனைக் கொண்டிருக்கிறது. சாம்சங் தனது சமீபத்திய நியோ க்யூஎல்இடி 8கே மற்றும் நியோ க்யூஎல்இடி டிவிகளை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. அல்ட்ரா ப்ரீமியம் டிவிகளின் தொகுப்புகள் பல டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. மூன்று 8கே மற்றும் மூன்று 4கே மாடல்களை உள்ளடக்கியது.

சாம்சங் க்யூஎல்இடி நியோ ஸ்மார்ட்டிவி

சாம்சங் க்யூஎல்இடி நியோ ஸ்மார்ட்டிவி

சாம்சங் க்யூஎல்இடி டிவிகளில் உள்ளமைக்கப்பட்ட IoT ஹப் அம்சமானது பயனர்களுக்கு மூன்றாம் தரப்பு சாதனங்கள் உட்பட ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. சாம்சங் டிவி ப்ளஸ் சலுகையின் ஒரு பகுதியாக பயனர்கள் 45-க்கும் மேற்பட்ட இலவச இந்திய மற்றும் உலகளாவிய டிவி சேனல்களின் அனுகலை வழங்குகிறது. அதுமட்டுமின்றி டிவியின் ரிமோட்கள் பேட்டரி இல்லாத சோலார் ஆதரவு அணுகல் அம்சத்தோடு வருகிறது.

சாம்சங் நியோ க்யூஎல்இடி 8கே ஸ்மார்ட்டிவி விலை

சாம்சங் நியோ க்யூஎல்இடி 8கே ஸ்மார்ட்டிவி விலை

சாம்சங் நியோ க்யூஎல்இடி 8கே ஸ்மார்ட்டிவி இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். சாம்சங் மூன்று நியோ க்யூஎல்இடி 8கே டிவிகளை அறிவித்துள்ளது. அது க்யூஎன்900பி மாடல் ஸ்மார்ட்டிவி, க்யூஎன்800பி மாடல் ஸ்மார்ட்டிவி, க்யூஎன்700பி மாடல் ஸ்மார்ட்டிவி ஆகும். புதிய ஸ்மார்ட்டிவிகள் ஆனது 65 இன்ச் முதல் 85 இன்ச் அளவுகள் வரை கிடைக்கிறது. சாம்சங் நியோ க்யூஎல்இடி டிவியின் க்யூஎன்900பி மாடல் 85 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. அதேபோல் க்யூஎன்800பி மாடல் ஆனது 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. க்யூஎன்700பி மாடல் இந்தியாவில் 65 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் ஆரம்ப விலை ரூ.3,24,990 என கிடைக்கிறது.

50 இன்ச் அளவு முதல் 85 இன்ச் டிஸ்ப்ளே அளவு வரை

50 இன்ச் அளவு முதல் 85 இன்ச் டிஸ்ப்ளே அளவு வரை

மற்ற நியோ க்யூஎல்இடி டிவிகளான மூன்று மாடல்களில் ஒன்பது அளவு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் க்யூஎன்95பி மாடல் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. அதேபோல் க்யூஎன்90பி ஆனது 85 இன்ச், 75 இன்ச், 65 இன்ச், 55 இன்ச் மற்றும் 50 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. அதேபோல் க்யூஎன்85பி மாடல் ஆனது 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இந்த நியோ க்யூஎல்இடி டிவி ஆனது ஆரம்ப விலையாக ரூ.1,14,990 என விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிவிகள் ஆனது சாம்சங் ரீடெய்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் பிற எலெக்ட்ரானிக் வாடிக்கையாளர்கள் கடைகளில் கிடைக்கிறது.

புதிய க்யூஎல்இடி டிவிகள் சலுகைகள்

புதிய க்யூஎல்இடி டிவிகள் சலுகைகள்

புதிய க்யூஎல்இடி டிவிகள் ஆனது 10 வருட நோ ஸ்க்ரீன் பர்ன் வாரண்டி ஆதரவோடு கிடைக்கிறது. நியோ க்யூஎல்இடி 8கே டிவியை வாங்கும் நுகர்வோர்களுக்கு சாம்சங் எச்டபிள்யூ-க்யூ990பி சவுண்ட்பார் மற்றும் ஸ்லிம்ஃபிட் கேம் சாதனம் இலவசமாக கிடைக்கும். நியூ க்யூஎல்இடி டிவிகள் ஆனது இலவச ஸ்லிம்ஃபிட் கேமராவுடன் வருகிறது. இந்த சாம்சங் டிவிகள் அதிகாரப்பூர்வ சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் உட்பட அனைத்து முக்கிய சில்லறை கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைகக்கின்றன.

சாம்சங் சிக்னேச்சர் இன்ஃபினிட்டி ஒன் டிசைன்

சாம்சங் சிக்னேச்சர் இன்ஃபினிட்டி ஒன் டிசைன்

சாம்சங் நியோ க்யூஎல்இடி 8கே, நியோ க்யூஎல்இடி டிவி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், 2022 நியோ க்யூஎல்இடி டிவிகள் சாம்சங் சிக்னேச்சர் இன்ஃபினிட்டி ஒன் டிசைனைக் கொண்டிருக்கிறது. இது குறைந்தபட்ச பெசல்கள் உடன் நேர்த்தியான மற்றும் மெலிதான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இந்த டிவிகள் ஒவ்வொன்றும் தடையற்ற ஸ்மார்ட் ஹோம் ஒருங்கிணைப்புக்கான உள்ளமைக்கப்பட்ட IoT மையத்தைக் கொண்டிருக்கிறது. நியோ க்யூஎல்இடி டிவிகள் ஆனது மென்மையான மற்றும் லேக் ஃப்ரீ கேமிங் அனுபவத்தை அளிக்கும் திறன் கொண்டவை என கூறப்படுகிறது.

90 வாட்ஸ் 6.2.4 சேனல் ஆடியோ அமைப்பு

90 வாட்ஸ் 6.2.4 சேனல் ஆடியோ அமைப்பு

சாம்சங் ஸ்மார்ட்டிவியில் உள்ள நியூரல் குவாண்டம் செயலி 8கே மற்றும் குவாண்டம் மேட்ரிக்ஸ் டெக்னாலஜி ப்ரோ அம்சங்கள் ஆனது பார்வை அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 2022 நியோ க்யூஎல்இடி டிவிகள் ஆனது கண் ஆறுதல் பயன்முறையைக் கொண்டிருக்கின்றன. இது ப்ளூ ஒளி வெளியீட்டை குறைக்கும் அம்சம் மற்றும் பிரகாசத்தை தாமாகவே குறைக்கும் ஆதரவையும் கொண்டிருக்கிறது. சாம்சங் நியோ க்யூஎல்இடி 8கே டிவிகள் ஆனது 90 வாட்ஸ் 6.2.4 சேனல் ஆடியோ அமைப்புடன் வருகிறது. இது 3டி சரவுண்ட் சவுண்ட் ஆதரவோடு டால்பி அட்மாஸ் அம்சத்தைக் கொண்டுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Samsung Neo QLED TV Launched in India with premium Specs: Price, Availability, Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X