Samsung TV வாங்குனா Galaxy S23 போன், சவுண்ட்பார், இன்னொரு டிவியே இலவசம்.. தீயாய் விற்பனையாகும் ஸ்மார்ட்டிவிகள்
சாம்சங் (Samsung), "தி ஃபூச்சர் ஃபெஸ்ட்" (The Future Fest) விற்பனை மூலம் புது ஸ்மார்ட் டிவிகளை (Smart-TV) வாங்குபவர்களுக்கு பல இலவசங்களை வழங்குகிறது. புது டிவி வாங்கினால், ஸ்மார்ட்போன் (Smartphone), சவுண்ட்பார், மற்றொரு டிவி என்று பல இலவசங்கள் கிடைக்கிறது.
சாம்சங் நியோ QLED 8K மற்றும் 4K டிவி (Samsung Neo QLED 8K and 4K TV):
க்வான்டம் மினி (Quantum Mini) LEDக்கள் கொண்டு க்வான்டம் மேட்ரிக்ஸ் (Quantum Matrix) தொழில்நுட்பம் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி செயல்படுகிறது. இதன் டால்பி ஆடம் (Dolby Atom), Q-சிம்ஃபனி (Q-Symphony) 3.0 மற்றும் ஆப்ஜெக்ட் ட்ராக்கிங் சவுன்ட் ப்ரோ (Object Tracking Sound Pro) வீட்டில் டியேட்டர் அனுபவத்தை கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக IoT ஹப் மற்றும் விடியோ கால்களுக்காக ஸ்லிம்ஃபிட் (SlimFit) கேமராக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் OLED டிவி (Samsung OLED TV):
நியூரல் க்வான்டம் ப்ராசசர் (Neural Quantum Processor) 4K கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த OLED டிவிக்கள் AI தொழில்நுட்பம் கொண்டு காட்சிகளை 4K தரத்திற்கு மேம்படுத்தும். இதன்மூலம் அன்பேரலல்ட் என்டர்டெயின்மென்ட் (Unparalleled Entertainment) அனுபவம் கிடைக்கும். இதன் HDR OLED+ திரை ஒவ்வொரு ஃப்ரேமையும் துள்ளியமாக காட்டும் தன்மையை கொண்டுள்ளது.
சாம்சங் QLED டிவி (Samsung QLED TV):
இந்த டிவியில் இருக்கும் க்வான்டம் டாட் (Quantum Dot) தொழில்நுட்பம் காட்சிகளை உயிரோட்டமாகவும், நிறங்களை துள்ளியமாகவும் காட்டும். சிறந்த காட்சி அனுபவத்துடன் சேர்த்து ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுன்ட் (Object Tracking Sound) மற்றும் ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்லிஃபையர் (Active voice amplifier) மூலம் தியேட்டர் போன்ற அனுவத்தை ஒருவர் பெற முடியும்.
வீடியோ கால்களுக்கு ஸ்லிம்ஃபிட் கேமரா மற்றும் ஸ்க்ரீன் ப்ரைட்னஸ் அட்ஜெஸ்மெட்டிற்காக (Screen Brightness Adjustment) ஐ-கம்ஃபோர்ட் மோட் (EyeComfort mode) ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது. அடுத்து நாம் பார்க்கவிருப்பது, க்ரிஸ்டல் 4K UHD டிவிகளை (Crystal 4K UHD TV) பற்றியது.

க்ரிஸ்டல் 4K UHD டிவி (Crystal 4K UHD TV):
சாம்சங்-கின் இந்த ஐஸ்மார்ட் (iSmart) 4K UHD டிவி க்ரிஸ்டல் 4K டிஸ்ப்ளே, ஸ்மார்ட் IoT ஹப், அடாப்டிவ் சவுன்ட் (Adaptive sound), டேப் வ்யூ (Tap view), ஸ்க்ரீன் மிரரிங் (Screen mirroring) மற்றும் லாக்-ஃப்ரீ (Lag-free) கேமிங் ஆகிய அம்சங்களுடன் ப்ரீமியம் அனுபவத்தை தரும் ஒரு தயாரிப்பாக இருக்கும்.
சாம்சங் டிவிகளுடன் கிடைக்கும் இலவசங்கள் (Free Gadgets With Samsung Smart TV's):
இப்போது இலவசங்களை குறித்து பார்க்கலாம். சாம்சங்-கின் 98" இன்ச் நியோ QLED 4K மற்றும் QLED 4K டிவி வாங்குபவர்களுக்கு ரூ. 1,24,999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் (Samsung Galaxy S23 Ultra Smartphone) இலவசமாக வழங்கப்படுகிறது.
அதேபோல, 50" இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான நியோ QLED, OLED, QLED மற்றும் க்ரிஸ்டல் 4K UHD டிவிக்கள் வாங்கினால் ரூ. 37,990 மதிப்புள்ள Q-சீரிஸ் சவுன்ட்பார் (Samsung Q Series Sound Bar) இலவசம். சாம்சங்கின் 85" இன்ச் மற்றும் 75" இன்ச் QLED டிவிக்கள் வாங்குபவர்களுக்கு ரூ. 69,990 மதிப்பிலான 50" இன்ச் QLED 4K ஷெர்ஃப் டிவி (The Serif TV) இலவசம்.
மேலும், சாம்சங் 65" மற்றும் 55" இன்ச் OLED மற்றும் QLED 4K டிவி வாங்கினால் ரூ. 15,990 மதிப்புள்ள சவுன்ட்பார் (Sound bar) இலவசம். இந்த சலுகைகள் ஜனவரி 31 வரை நடைபெறும் Samsung Future Fest மட்டுமே செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications








