Home
News

Samsung போன் இருக்கா? அப்போ உஷார்.. புது அப்டேட்டால் போனே போச்சு.. புலம்பும் மக்கள்.. தொடர்ந்து எழும் சிக்கல்!

சாம்சங் (SAMSUNG) நிறுவனம் சமீபத்திய அதன் ஸ்மார்ட்போன்களுக்கான சாப்ட்வேர் அப்டேட்டை வெளியிட்டது. இந்த மென்பொருள் புதுப்பிப்பு காரணமாக, உலகளவில் உள்ள பல மில்லியன் சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் தற்போது குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவலான புகார்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான புகார்கள் பழைய மாடல்களின் டிஸ்பிளேவில் பச்சை நிற கோடுகள் காண்பிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில போன்கள் தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக்கொண்டே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் பெரியளவு பாதிப்புகளும் உருவாகியுள்ளது. அது பற்றிய முழு விபரம் இதோ.

சாம்சங் வெளியிட்ட சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்டிற்கு பிறகு, பல ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து மீண்டும்-மீண்டும் ரீஸ்டார்ட் ஆவதாக கூறப்பட்டுள்ளது. சில போன்களின் டிஸ்பிளேவில் பச்சை நிற கோடு தோன்றி, டிஸ்பிளே கோளாறை உருவாக்கியுள்ளது. இன்னும் சில போன்களை சரி செய்யும் பொழுது, போனில் இருந்த மொத்த டேட்டாவும் பறிபோனதாக சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கு சாம்சங் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

Samsung போன் இருக்கா? அப்போ உஷார்.. புது அப்டேட்டால் போனே போச்சு..

Samsung போன் இருக்கா? அப்போ உஷார்.. புது அப்டேட்டால் போனே போச்சு:

பாதிக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 (Galaxy S10 series), சாம்சங் நோட் 10 (Galaxy Note 10 series), சாம்சங் கேலக்ஸி A50 (Galaxy A50) மற்றும் சாம்சங் கேலக்ஸி A90 (Galaxy A90) ஆகியவை உள்ளன. பயனர்கள் தங்கள் சாதனங்கள் பூட்லூப்பில் (bootloop) சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். பூட்லூப் என்பது, போன் இயக்க முறைமையை முழுமையாக ஏற்றாமல், தொடர்ந்து மீண்டும் மீண்டும் ரீஸ்டார்ட் செய்து ரீபூட் ஆகும் கோளாறாகும்.

இந்த பிரச்சினைகள் ஸ்மார்ட் திங்க்ஸ் பிரேம்வொர்க்கை 2.2.02.1 (Framework 2.2.02.1) பதிப்புக்கு புதுப்பித்த பிறகு தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினை தென்கொரியா, பெல்ஜியம், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முதன்மையாக புகாரளிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் மனக்கசப்புக்களை ரெடிட்டில் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங்கின் இந்த எதிர்பாராத பிழைக்கு, நிறுவனம் இப்போது பதில் வழங்கியுள்ளது. இந்த பரவலான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, சாம்சங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்காக அருகிலுள்ள சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும், தங்கள் தரவை பேக்அப் எடுக்கவும் நிறுவனம் அறிவுரைத்துள்ளது. இந்த பிரச்சினை முதன்மையாக OneUI 4 அடிப்படையிலான Android 12 4 இல் இயங்கும் சாதனங்களை பாதித்துள்ளது என்று தெரிகிறது.

தொடர்ந்து எழும் சிக்கல்! புலம்பும் Samsung மக்கள்.. சிக்கலை சரி செய்ய என்ன வழி?

துரதிர்ஷ்டவசமாக, சில பயனர்கள் தங்கள் போன்களை சாம்சங் சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரிசெய்ய முயன்ற பொழுது, அவர்களின் போனில் இருந்த தனிப்பட்ட தரவை இழக்க நேர்ந்தது என்றும் சிலர் புகார் அளித்துள்ளனர். இன்னும் சிலருக்கு போனில் எந்த சிக்கலும் எழாதபோது, அவர்களால் யூடியூப் தளத்தை அணுக முடியாமல் போனது. ஒரு வேலை உங்களுடைய சாம்சங் போனிற்கும் புதிய அப்டேட் கிடைக்கிறது என்றால் கவனமாக செயல்படுங்கள்.

புதிய அப்டேட்டை உங்கள் போனில் நிறுவுவதற்கு முன்பு, உங்கள் போனில் உள்ள தகவல்களை கண்டிப்பாக பேக்அப் எடுத்துக்கொள்ளும் படி அறிவுரைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்கள் போனில் ஏதேனும் கோளாறுகளை நீங்கள் இப்போது சந்திக்கிறீர்கள் என்றால், உடனே உங்கள் அருகில் உள்ள சாம்சங் சர்வீஸ் சென்டருக்கு நேரில் சென்று, உங்கள் போனில் உள்ள கோளாறுகளை சரி செய்துகொள்ளும்படி சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Mobiles and Smartphones Malfunction After Recent Update How To Solve The Errors Tips
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X