Home
News

அறிமுகம் ஆச்சு., இதுதான் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்: விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி!

தொடர்ந்து இந்திய சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் தற்போதைய காலக்கட்டத்தில் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு 5ஜி அம்சத்தோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மலிவு விலை முதல் உயர்தர பிரிவு விலை வரை 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சாம்சங்கின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கலாம்.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் விலை ஆன்லைனில் கசிந்துள்ளது. இது சாம்சங் நிறுவனத்தின் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். இருப்பினும் நிறுவனம் தரப்பில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் விலை ஐரோப்பாவின் சில்லறை இணையதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.16,500 ஆக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி விரைவில் அறிமுகம் செய்யப்படும் எந பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ22 இன் 4ஜி மாறுபாடும் அறிமுகம் செய்யும் என முந்தைய வதந்திகள் தெரிவித்தன.

ரூ.16,000 என்ற விலைப் பிரிவில் வரும்

ரூ.16,000 என்ற விலைப் பிரிவில் வரும்

டீல் என்டெக்கின் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி வெளியீட்டுக்கு முன்னதாக ஐரோப்பிய சில்லறை விற்பனையானர் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.16,000 என்ற விலைப் பிரிவில் வரும் என பட்டியல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 ஜிபி சேமிப்பு மாதிரி விலை இதுவாகும். அதேபோல் வாட் உட்பட இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.17,800 ஆக இருக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பட்டியல் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வரும் என தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் பரிமாணம் 700 எஸ்ஏசி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் ஆதரவோடு வரும் எனவும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனானது 205 கிராம் எடையும், 9 மிமீ தடிமனுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் சாம்சங்கின் ப்ளூடூத் பட்டியலிலும் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ப்ளூடூத் வி5.0 ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி குறித்த தகவல் ரெண்டரில் கசிந்தது. அதில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் செல்பி கேமரா, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் முதன்மை பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உள்ளிட்ட டிரிபிள் ரியர் கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி சாம்பல், வெளிர் பச்சை, ஊதா மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வரும் என மார்ச் மாதத்தில் வெளியான தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யுமா என்பதை விரைவில் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Samsung may Launch Samsung Galaxy A22 5G as a low cost 5G Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X