புதுமையான டிஸ்பிளேவை உருவாக்கும் சாம்சங்: இதனால் என்ன பயன்?
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களும் தனித்துவமான அமசங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட் டிவி,ஸ்மார்ட்போன்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக சிறந்த தரம், தனித்துவமான மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் சாதனங்கள் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் stretchable ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தனித்துவமான அம்சங்களை கொண்டு stretchable ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களை உருவாக்கியுள்ளதாக சாம்சங் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது. இவை ரப்பர் பேண்டுகள் போன்று தோலில் ஒட்டிக்கொள்ளவும், பின்பு இதை அணிந்தவரின் இதயத் துடிப்பைக்
கண்காணிக்கவும் முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் stretchable organic light-emitting diode display டிஸ்பிளேவை உருவாக்கியுள்ளதாகவும், இது ஃபோட்டோபில்திஸ்மோகிராபி சென்சார் முறையை பயன்படுத்தி பயனரின் இதயத் துடிப்பை உண்மையான அளவில் அளவிடவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
Science Advances வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி இதுபோன்ற புதுமையான தொழில்நுட்ப கருவிகள் நம்பகத்தன்மையைக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதுமையான டிஸ்பிளே ஆனது நீங்கள் தூங்கும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது பயோமெட்ரிக் தரவை அளவிட இது உங்களை அனுமதிக்கிறது.

ஆனாலும் இதுபோன்ற தொழில்நுட்ப கருவிகள் வெற்றிபெறுவது கடினமான விஷயம் என்றுதான் கூறப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்பு வசதியுடன் மக்களுக்கு பாதிப்பில்லாமல் இதுபோன்ற டிஸ்பிளேக்கள் வந்தால் நன்றாக இருக்கும். மேலும் அண்மையில் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி அம்சங்கள்
டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700
ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
கைரேகை சென்சார் வசதி
5 ஜி,வைஃபை
புளூடூத், ஜிபிஎஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ22 4ஜி அம்சங்கள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80
ரேம்:4ஜிபி/6ஜிபி
மெமரி:64ஜிபி/128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 13எம்பி செல்பீ கேமரா
பேட்டரி: 5000எம்ஏஎச் பேட்டரி
15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
கைரேகை சென்சார் வசதி
எல்.டி.இ, வைஃபை,
புளூடூத், ஜி.பி.எஸ்
News Source: techradar.com


Click it and Unblock the Notifications