இது வெறும் பேட்டரி இல்லை அதுக்கும் மேல..!!

Posted By:

பேட்டரி இன்றைய இளைஞர்கள் மத்தியில் வெறும் வார்த்தை என்பதோடு நொடியில் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவும் செய்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் சில காலமாக பயன்பாட்டில் இருந்து வருவது பவர் பேங்க் எனும் கையில் வைத்து கொள்ள கூடிய சார்ஜர் ஆகும்.

பழைய ஸ்மார்ட்போன் : கவனிக்க வேண்டியவை..!!

தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு கருவிகளின் வரவு தொழில்நுட்ப சந்தையின் வளர்ச்சியை நம் கண் முன் நிறுத்த தவறவில்லை என்றே கூறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கண்காட்சி

கண்காட்சி

ஸ்மார்ட் கருவி பயனர்களை கருத்தில் கொண்டு தென்கொரியா நாட்டில் இன்டர்பேட்டரி 2015 கண்காட்சி தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

அறிமுகம்

அறிமுகம்

இந்த கண்காட்சியில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சாம்சங் மற்றும் எல்ஜி புதிய வகை பேட்டரி ப்ரோட்டோடைப்களை அறிமுகம் செய்துள்ளன.

கருவிகள்

கருவிகள்

புதிய வகை பேட்டரிகள் அணியும் கருவிகளின் சந்தையில் புதிய ட்ரென்டாக இருக்கும்.

பேன்டு

பேன்டு

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் பேட்டரி பார்க்க பேன்டு போன்றே காட்சியளிக்கின்றது.

பயன்பாடு

பயன்பாடு

மேலும் இந்த பேன்டு பேட்டரியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். கையில் அணிவதோடு, முடி க்ளிப், ஆடை, அணிகலன் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஸ்ட்ராப்

ஸ்ட்ராப்

இதோடு இந்த பேன்டு ஸ்மார்ட்வாட்ச் ஸ்ட்ரிப் போன்றும் பயன்படுத்தலாம். 0.3 எம்எம் தட்டையாக இருக்கும் பேட்டரி ஸ்மார்ட்வாட்ச்களுக்கு சக்தியூட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலம்

காலம்

பேன்டு வடிவில் இருப்பதால் இவ்வகை பேட்டரிகள் அதிகபட்சம் 50 சதவீதம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வயர் பேட்டரி

வயர் பேட்டரி

எல்ஜி நிறுவனத்தின் வயர் பேட்டரி பார்க்க வாட்ச் ஸ்ட்ராப்ஸ பிரேஸ்லெட் போன்று காட்சியளிக்கின்றது.

பேக்கப்

பேக்கப்

இதன் வடிவமைப்பு ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என எல்ஜி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

சோதனை

சோதனை

தற்சமயம் சோதனை பணிகளில் இருக்கும் இவ்வகை பேட்டரிகள் விரைவில் வனிக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung, LG unveil Flexible Batteries for Wearables. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்