கேலக்ஸி S23 முதல் கேலக்ஸி A06 வரை.. எந்தெந்த பழைய Samsung போன்களுக்கு One UI 8 அப்டேட் கிடைக்கும்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) பிராண்டின் கீழ், அதன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான பல ஏஐ அம்சங்களை அறிமுகம் செய்த வேகத்தில், சாம்சங் (Samsung) நிறுவனம் பல புதிய ஏஐ அம்சங்களை கொண்ட தனது லேட்டஸ்ட் ஆப்ரேடிங் சிஸ்டம் ஆன ஒன் யுஐ 8 பீட்டா புரோகிராமை (One UI 8 Beta Program) ரிலீஸ் செய்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ (Android 16 OS) அடிப்படையாக கொண்ட இந்த பீட்டா ரிலீஸ், இப்போது அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஜெர்மனி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கிடைக்கிறது. முழுமையான ரோல் அவுட் 2025 கோடையின் பிற்பகுதியில் தொடங்கும். லேட்டஸ்ட் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸை (Samsung Galaxy S25 Series) தவிர வேறு என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஒன் யுஐ 8 அப்பேட்டை -ஐ பெறுவதற்கான தகுதியான போன்களின் பட்டியலில் உள்ளன? இதோ லிஸ்ட்:

- சாம்சங் கேலக்ஸி எஸ்23
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ்
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா
- சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ
- சாம்சங் கேலக்ஸி எஸ்22
- சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ்
- சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா
- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 7
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 6
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 5
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4
- சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 4
- சாம்சங் கேலக்ஸி ஏ33
- சாம்சங் கேலக்ஸி ஏ53
- சாம்சங் கேலக்ஸி ஏ73
- சாம்சங் கேலக்ஸி ஏ14
- சாம்சங் கேலக்ஸி ஏ24
- சாம்சங் கேலக்ஸி ஏ34
- சாம்சங் கேலக்ஸி ஏ54
- சாம்சங் கேலக்ஸி ஏ15
- சாம்சங் கேலக்ஸி ஏ25
- சாம்சங் கேலக்ஸி ஏ35
- சாம்சங் கேலக்ஸி ஏ55
- சாம்சங் கேலக்ஸி ஏ06
- சாம்சங் கேலக்ஸி ஏ16
- சாம்சங் கேலக்ஸிஏ26
- சாம்சங் கேலக்ஸி ஏ36
- சாம்சங் கேலக்ஸி ஏ56
ஒன்பிளஸ் ஏஐ உடன் சேர்த்து ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு புதிய ஹார்வேர்-ஐயும் வெளியிட்டுள்ளது. அது பிளஸ் கீ (Plus Key) என்று அழைக்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஏஐ அம்சங்களை உள்ளடக்கிய இந்த பிளஸ் கீ ஆனது இந்தியாவில் ஒன்பிளஸின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் ஏஐ-யின் கீழ், ஒன்பிளஸ் பிளஸ் கீ வழியாக ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன ஏஐ அம்சங்கள் அணுக கிடைக்கும்? ஒன்பிளஸ் ஏஐ பிராண்டின் கீழ் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த போவதாக ஒன்பிளஸ் கூறுகிறது. இவற்றில் - ஒன்பிளஸ் ஏஐ வாய்ஸ் ஸ்க்ரைப் அம்சமும் அடங்கும், இது மெசேஜ் அனுப்புதல் மற்றும் ஆன்லைன் மீட்டிங் ஆப்களுக்குள் கால்கள் மற்றும் மீட்டிங்களை ரெக்கார்ட் செய்ய, அதை சம்மரைஸ் செய்ய மற்றும் மொழிபெயர்க்க அனுமதிக்கும்.
இது ஒன்பிளஸ் ஏஐ கால் அசிஸ்டன்ட்-ஐ பெறும். ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள ஒன்பிளஸ் டயலர் என்கிற அம்சம் ஆனது இனிமேல் கால்களின் போது ஆட்டோமெட்டிக் கால் சம்மரி மற்றும் நிகழ்நேர கால் மொழிபெயர்ப்புக்கான ஆதரவையும் வழங்கும். பின்னர் ஒரு மொழிபெயர்ப்பு அம்சமும் இருக்கும், இது அடிப்படையில் டெக்ஸ்ட், லைவ் வாய்ஸ், கேமரா அடிப்படையிலான மற்றும் ஸ்க்ரீன் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அனைத்து மொழிபெயர்ப்பு திறன்களையும் ஒரே ஆப்பின் கீழ் கொண்டுவருகிறது. இதோடு ஏஐ சேர்ச், ஏஐ ரீஃப்ரேம் மற்றும் ஏஐ பெஸ்ட் ஃபேஸ் 2.0 ஆகிய அம்சங்களும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








