16எம்பி ப்ளக் அன்டு ப்ளே சென்சாரை வெளியிடும் சாம்சாங்.!

சாம்சாங் நிறுவனம் புதிய 16எம்பி ஐசோசெல் ப்ளக் அன்டு ப்ளே இமேஜ் சொலியூசனை உருவாக்கியுள்ளது. பார்ட்னர் நிறுவனங்களின் செயல்பாடுகளை வேகப்படுத்த இந்த புதிய சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

|

சாம்சாங் நிறுவனம் புதிய 16எம்பி ஐசோசெல் ப்ளக் அன்டு ப்ளே இமேஜ் சொலியூசனை உருவாக்கியுள்ளது. பார்ட்னர் நிறுவனங்களின் செயல்பாடுகளை வேகப்படுத்த இந்த புதிய சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற ஓ.எம்.ஈ ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கருவிகளுக்கான பாகங்களை தயாரிப்பதில் பெயர்பெற்றது சாம்சாங் நிறுவனம்.

16எம்பி ப்ளக் அன்டு ப்ளே சென்சாரை வெளியிடும் சாம்சாங்.!

அதனை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.ஏனெனில் சென்சார் அளவில் மட்டுபடுத்தாமல் பகுதி அளவில் ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. இது போன் கேமராக்களில் சாம்சாங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் 4 மாத உருவாக்கல் செயல்பாடுகளை (Development process) குறைக்கலாம் என உறுதியாக கூறுகிறது இந்த கொரியன் நிறுவனம்.

பிற நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு பாகங்கள் மற்றும் லென்ஸ்களுடன் சேர்த்து சென்சார் பகுதியும் முன்னரே நன்கு செயல்படும்படி கட்டமைக்கப்பட்டுள்ளதால் இது சாத்தியமே. எனவே மீண்டும் மேம்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்பதையே இந்த கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.

இந்த கண்டுபிடிப்பு 1 மைக்ரோமீட்டர் ஐசோசெல் சிலிம் 3P6 சென்சாரை அடிப்படையாக கொண்டது. இந்த சென்சார் செல்பி கேமராக்களில் 2.0மைக்ரோமீட்டர் சென்சாராகவும் செயல்படுகிறது.இதன் மூலம் இருமடங்கு ஆட்டோபோகஸ் வசதி கிடைக்கும் என்கிறது சாம்சாங்.

சாம்சாங் நிறுவனம் மே3 முதல் இந்த புதிய கண்டுபிடிப்பை வெளியிடவுள்ளது. இந்த சென்சார் பார்ட்னர்கள் கையில் கிடைத்தவுடன் அவர்கள் பரிசோதனை செய்யும் நேரம் குறிப்பிட்ட அளவு குறையும்.

அதே நேரம், சாம்சங் கேலக்ஸி நோட் 9 க்கு சீனாவின் தொழில் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

சாம்சங் நிறுவனம் திரையில் செயல்படும் பிங்கர் பிரிண்ட் சென்சாரை உருவாக்குவதில் நீண்டகாலமாக செயலாற்றிவருகிறது. கேலக்ஸி9 மொபைலில் இந்த புதிய கண்டுபிடிப்பை இணைக்க திட்டமிட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் புதிதாக வெளிவரவுள்ள கேலக்ஸி நோட்9 ல் இந்த புதிய கண்டுபிடிப்பு கண்டிப்பாக இருக்கும் என தகவல்கள் கசிகின்றன.

Best Mobiles in India

English summary
Samsung launches a new 16MP Plug Play sensor; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X