Home
News

4K,8K தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்டிவி: இது வீடா இல்ல தியேட்டரானு நினைக்க வைக்கும்- சாம்சங் க்யூஎல்இடி டிவி!

சாம்சங் நிறுவனம் புதிய வரம்பில் நியோ க்யூஎல்இடி 8கே டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிகள் க்யூஎன்800ஏ 75 இன்ச் மற்றும் 65 இன்ச், க்யூஎன்900ஏ 85 இன்ச் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கும். சாம்சங் நிறுவனம் தனது அல்ட்ரா ப்ரீமியம் நியோ க்யூஎல்இடி டிவி வரம்பை இந்தியாவில் ரூ.99,990 முதல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவி புதிய வரம்பில் உளிச்சாயுமோரம் குறைவான இன்ஃபினிட்டி ஒன் டிசைன் மற்றும் சினிமா தர பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.

நியோ க்யூஎல்இடி 8கே டிவிகள்

சாம்சங் நிறுவனம் புதிய வரம்பான நியோ க்யூஎல்இடி 8கே டிவிகள் ஆனது க்யூஎன்800ஏ 75 இன்ச் மற்றும் 65 இன்ச் வேரியண்ட்டிலும், க்யூஎன்900ஏ 85 இன்ச் ஆகிய இரண்டு வேரியண்ட் மாடல்களிலும் வருகிறது. 2021 நியோ க்யூஎல்இடி 4கே டிவி வரிசை இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. க்யூஎன்85ஏ 75 இன்ச், 65 இன்ச், 55 இன்ச் மற்றும் க்யூஎன்90ஏ 85 இன்ச், 65 இன்ச், 55 இன்ச், 50 இன்ச் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.

சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் சலுகைகள்

நியோ க்யூஎல்இடி டிவி வரம்பின் விலையானது ரூ.99,990 முதல் அனைத்து சாம்சங் சில்லறை கடைகளிலும், முன்னணி நுகர்வோர் மின்னணு கடைகளிலும், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும். நுகர்வோர் முன்கூட்டிய முன்பதிவுக்கு பாராட்டு அறிவிப்பாக நியோ க்யூஎல்இடி டிவிகள் வாங்கும்போது கேலக்ஸி டேப் எஸ்7+, கேலக்ஸி எஸ் 6 லைட் எல்டிஇ ஆகியவைகளுக்கு ரூ.20,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் ஏப்ரல் 15-18 வரை இந்த சாதனங்கள் வாங்கும்போது ரூ.1,990வரை தொடங்கும் இஎம்ஐ சலுகைகளும் கிடைக்கிறது.

குவாண்டம் செயலி மேம்பாடு

ஏப்ரல் 19-30 2021 வரை முன்புக்கிங் சலுகைகள் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் அனைத்து முன்னணி நுகர்வோர் மின்னணு கடைகளில் கிடைக்கிறது. நியோ க்யூஎல்இடி ஸ்மார்ட்டிவிகள் சாம்சங்கின் தனியுரிம சக்திவாய்ந்த நியோ குவாண்டம் செயலியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ஏஐ உயர்தர, ஆழமான கற்றல் தொழில்நுட்பத்துடன் 16 வெவ்வேறு நியூரல் நெட்வொர்க் மாடல்களோடு வருகிறது. இது 4கே மற்றும் 8கே தர வெளியீட்டு மேம்பாடு உடன் வருகிறது.

பல்வேறு கேமிங் அம்சம்

2021 நியோ க்யூஎல்இடி ஸ்மார்ட்டிவியானது கேமிங் அம்சத்தை மனதில் வைத்து மோஷன் எக்ஸிலரேட்டர் டர்போ+ அம்சத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி சூப்பர் அல்ட்ரா வைட் கேம் வியூ மற்றும் கேம் பார் பிசி கன்சோல் விளையாட்டு வாய்ப்பு உடன் வழங்குகிறது. அதோடுமட்டுமின்றி 2021 நியோ க்யூஎல்இடி டிவி மாடல்கள் ஆட்டோ லோ லேடன்சி பயன்முறையில் தடையற்ற கேமிங் அனுபத்தோடு வழங்குகிறது. அதுமட்டுமின்றி விளையாட்டாளர்கள் திரையின் விகிதத்தை எளிதில் சரிசெய்ய முடியும். அதேபோல் வயர்லெஸ் ஹெட்செட்கள் இணைப்பு அம்சமும் இதில் இருக்கிறது. ப்ரீமியம் தரவரிசை, அறைமுழுவதும் நிரப்பும் ஆடியோ அம்சங்கள் ஆகியவைகளோடு வருகிறது. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் ப்ரோ டைனமிக் ஒலி திரை இயக்கத்தோடு வருகிறது. இது அதிவேக ஒலியை வழங்குகிறது.

சாம்சங் டிவி ப்ளஸ் சேவை

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் டிவி ப்ளஸ் சேவை புதிய மாடல்களானது, செய்தி வாழ்க்கை முறை, தொழில்நுட்பம், கேமிங், அறிவியல், விளையாட்டு, இசை, திரைப்படங்கள் போன்ற பல்வேறு அற்புதமான உள்ளடக்கத்தை வழங்குகிறது. கூடுதல் செட்டாப் பாக்ஸ் போன்ற எந்த சாதனங்களும் இல்லாமல் இதை இயக்கமுடியும்.

Best Mobiles in India

English summary
Samsung Launches its Neo QLED With 4K, 8K Smart TVs in India: Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X