Home
News

இனிமே வேற லெவலில் துணி துவைக்கலாம்.. பட்ஜெட்டில் டூயல் ஃபில்டருடன் வரும் Samsung வாஷிங் மெஷின்

இந்தியாவில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் புதிய செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் அறிமுகமாகி உள்ளன. டூயல் மேஜிக் ஃபில்டர், சாஃப்ட் க்ளோசிங் டஃப்னட் கிளாஸ் லிட் என பெண்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளன. இதன் மற்ற அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் இதோ.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் துணி துவைப்பதற்கு என்று ஒரே நாளே தேவைப்படும். வாரம் முழுக்க வேலை செய்த பின்பு கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையை அதற்காகவே செலவழிக்க நேரிடும். இவர்களுக்கு பட்ஜெட் விலை வாஷிங் மெஷின்கள் மிகுந்த உதவியாக இருக்கும். அதுவும் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களாக இருந்தால் சொல்லவே தேவையில்லை.

வேற லெவலில் துணி துவைக்கலாம்.. பட்ஜெட்டில் Samsung வாஷிங் மெஷின்!

ஒரு மணி நேரத்தில் துணிகளை துவைத்து முடித்துவிடலாம். இதனால் உங்களுக்கு நேரமும், உடல் உழைப்பும் வெகுவாக குறையும். இதுபோன்ற வாஷிங் மெஷின்கள் வாங்க திட்டமிட்டவர்களுக்கு சாம்சங்கின் புதிய செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் ( Semi Automatic Washing Machines) பொருத்தமாக இருக்கும்.

சாம்சங் நிறுவனம், WT80B3560GB மற்றும் WT80B3560GY என்னும் 2 புதிய செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 2 வாஷிங் மெஷின்களும் முறையே 9 கிலோ, 8 கிலோ கெபாசிட்டியில் கிடைக்கிறது. எளிதாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களை சாம்சங் ( Samsung) இணைய தளத்திலும், அமேசான் (Amazon),
பிளிப்கார்ட் (Flipkart) தளங்களிலும் வாங்கிக்கொள்ளலாம்.

சாம்சங் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் அம்சங்கள் மற்றும் விலை: WT80B3560GB மற்றும் WT80B3560GY ஆகிய 2 வாஷிங் மெஷின்களும் விலை மற்றும் கெபாசிட்டியை தவிர்த்து ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளன. இந்த வாஷிங் மெஷின்கள் டூயல் மேஜிக் ஃபில்டர் (Dual Magic Filter), சாஃப்ட் க்ளோசிங் டஃப்னட் கிளாஸ் லிட் (Soft Closing Toughened Glass Lid) கொண்டுள்ளது.

மூன்று ரோலர்கள் மற்றும் 6 பிளேடுகளை கொண்ட ஹெக்ஸா ஸ்ட்ரோம் பல்சேடார் (Hexa Storm Pulsator) உள்ளது. குறிப்பாக 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் (5 Star Energy Rating) உள்ளது. இதனால் மற்ற செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களை விட குறைவான மின்சாரத்தையே இவை எடுத்துக்கொள்ளும். இந்த வாஷிங் மெஷின்களில் மேஜிக் மிக்ஸர் (Magic Mixer) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் டிஜர்டெண்ட் பவுடர், உங்களது துணிகளில் படியாமல் இருக்கும். அதேபோல ஆட்டோ ஸ்டார்ட் (Auto Restart) வசதி மூலம் பவர் கட்டுக்கு பின்பு, மீண்டும் தானாகவே மெஷின் செயல்படத்தொடங்கிவிடும். ராட் புரெட்டெக்ஷன் (Rat Protection) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எலிகள் வாஷிங் மெஷினுக்குள் நுழைய முடியாது.

இந்த வாஷிங் மெஷின்களுக்கு 5 வருட வாரண்டியும் 2 வருட கம்பிரஹென்சிவ் ப்ராடக்ட் வாரண்டியும் வழங்கப்படுகிறது. விலையை பொறுத்தவரையில், 9 கிலோ வேரியண்ட் (WT80B3560GB) ரூ.16,500ஆகவும், 8 கிலோ வேரியண்ட் (WT80B3560GY) ரூ.14190ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டார்க் கிரே & வைன், டார்க் கிரே & எபோனி பிளாக், லைட் கிரோ & எபோனி பிளாக் கலர்களில் கிடைக்கிறது. இப்போது ஆஃபர் மூலம் 5 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung launches budget semi-automatic washing machines, price starts at rs 15000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X