Home
News

மடிக்கலாம், தூக்கலாம்- சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3, ஃப்ளிப் 3 அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி அன்பேக் நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி அன்பேக் நிகழ்வு 2021

சாம்சங் கேலக்ஸி அன்பேக் நிகழ்வு 2021

சாம்சங் கேலக்ஸி அன்பேக் நிகழ்வு 2021 தற்போதுதான் நடந்தது. இந்த நிகழ்வில் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3, கேலக்ஸி பட்ஸ் 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ்-ஐ வெளியிட்டது. இந்த நிகழ்வானது சாம்சங் கேலக்ஸியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூலமாக நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. சாம்சங் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 முறையே ஆப்பிள் வாட்ச் தொடர் மற்றும் ஆப்பிள் ஏர்பாட் ப்ரோவுடன் போட்டியிடும் விதமாக இருக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 விலை

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 விலை

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 விலை குறித்து பார்க்கையில் இது 1,799.99 டாலராக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.1.34 லட்சம் ஆகும். மேலும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 விலை 999.99 டாலராக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.74,250 ஆகும். கேலக்ஸி பட் 2 விலை 149.99 டாலராக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.11,100 ஆக இருக்கிறது. கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 மற்றும் இசட் ஃப்ளிப் 3 ஆகஸ்ட் 11 முதல் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும். இந்த சாதனம் ஆகஸ்ட் 27 முதல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கொரியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் தொடங்கப்படும். சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 டிஸ்ப்ளேவின் கீழ் முன்புற கேமரா அம்சத்தோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 சாதனமானது 6.7 இன்ச் டைனமிக் அமோலெட் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவுடன் அதிக புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் வேகமான மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இது 3300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 12 எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்போடு 10 எம்பி முன்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இரண்டு அமோலெட் டிஸ்ப்ளேக்கள்

இரண்டு அமோலெட் டிஸ்ப்ளேக்கள்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 இரண்டு அமோலெட் காட்சிகளை கொண்டுள்ளது. இதன் வெளிப்புறம் 6.2 இன்ச் மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளே 7.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இருக்கிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வசதி உள்ளது. புகைப்படங்களை பதிவு செய்ய 12 எம்பி பின்புற கேமரா அமைப்பும், வெளிப்புற காட்சியில் 10 லென்ஸ் மற்றும் டிஸ்ப்ளே ஷூட்டர் கூழ் 4 எம்பி கேமரா உள்ளது. எஸ் பென் ஆதரவும் இதில் கிடைக்கும்.

முழுமையாக மேம்படுத்தப்பட்ட எஸ் பென்

முழுமையாக மேம்படுத்தப்பட்ட எஸ் பென்

பயனர்கள் தங்கள் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவில் முழுமையாக மேம்படுத்தப்பட்ட எஸ் பென் அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இசட் ஃபோல்ட் 3 எஸ் பென் ஆனது இரண்டு விருப்பங்களில் வருகிறது. எஸ் பென் ஃபோல்ட் எடிஷன் மற்றும் எஸ் பென் ப்ரோ ஆகும். இசட் ஃபோல்ட் 3 முக்கிய டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக ஃபோர்ஸ் லிமிட் தொழில்நுட்பத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Launched its Galaxy Z Flip 3, Galaxy Z Fold 3 With Dynamic Amoled Display: Price, Availability
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X