சாம்சங் அதிரடி : விரைவில் இந்தியாவில் வெளியாகும் கேலக்ஸி சி.!!

Written By:

தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையை நீட்டிக்க முடிவு செய்திருக்கின்றது. அதன் படி அந்நிறுவனம் புதிய கேலக்ஸி சி வகை ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய சாம்சங் கேலக்ஸி சி வகை ஸ்மார்ட்போன் கருவிகள் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் வெளியாக இருக்கின்றது. அந்த வகையில் முதலில் சீனாவிலும் அதன் பின் இந்தியாவிலும் இந்த கருவி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அம்சங்கள்

அம்சங்கள்

தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி சி கருவியானது கேலக்ஸி ஏ, கேலக்ஸி இ, மற்றும் கேலக்ஸி ஜெ சீரிஸ் போன்றே குறைந்த ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை

திரை

அதன் படி கேலக்ஸி சி கருவிகளில் 5.2 இன்ச் திரை வழங்கப்படலாம் என்றும் இதன் விலை ரூ. 10,000 முதல் ரூ.12,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியீடு

வெளியீடு

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஜெ3 கருவியை இந்தியாவில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ரூ.8,990க்கு வெளியிடப்பட்ட இந்த கருவியில் 5 இன்ச் திரை, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிரசஸர் வழங்கப்பட்டுள்ளது.

எஸ் பைக் மோடு

எஸ் பைக் மோடு

மேலும் இந்த கருவியில் எஸ் பைக் மோடு எனும் புதிய அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் வாகனம் ஓட்டும் போது அழைப்புகள் வந்தால் போன் தானாக சைலன்ட் மோடில் வைக்கப்பட்டு அழைத்தவருக்கு குறுந்தகவல் ஒன்றும் அனுப்பப்பட்டு விடும்.

கவனம்

கவனம்

இந்த அம்சம் இருந்தால் வாகன ஓட்டிகள் சாலையில் கவனம் செலுத்த முடியும் என்பதோடு முக்கிய கான்டாக்ட்களில் இருந்து அழைப்புகள் வந்தால் விசேஷ நோட்டிபிகேஷன் வழங்கும் செய்யும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சாம்சங் கேலக்ஸி எஸ்7 பிரச்சனைகளும் தீர்வுகளும்.!!

ஸ்மார்ட்போன் திரை உடைந்தால் என்ன செய்ய வேண்டும்.??

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung to launch Galaxy C series in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot