அடுத்த ஆண்டு 5G தொழில்நுட்பத்தில் காலடி எடுத்து வைக்கும் சாம்சங் நிறுவனம்

அனேகமாக அடுத்த வருடம் 5G உலகில் சாம்சங் காலடி எடுத்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Siva
|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 மாடல் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைவரும் எதிர்பார்க்காத 5G தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பையும் சாம்சங் நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளதாம். அனேகமாக அடுத்த வருடம் 5G உலகில் சாம்சங் காலடி எடுத்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு 5G தொழில்நுட்பத்தில் காலடி எடுத்து வைக்கும் சாம்சங் நிறுவ

பார்சிலோனாவில் நடைபெற்ற MWC 2017 தொழில்நுட்ப கண்காட்சியில் சாம்சங் நிறுவனம் தனது எதிர்கால 5G தொழில்நுட்பம் குறித்து விளக்கியுள்ளது. உலகிற்கு 5G தொழில்நுட்பத்தையும் அதுசம்பந்தமான தயாரிப்புகளையும் தங்கள் நிறுவனம் வழங்குவதில் பெருமைப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

5G தொழில்நுட்பம் என்பது அடுத்த ஜெனரேஷனின் புரட்சியாக இருக்கும் என்றும் இந்த நெட்வொர்க் உலகையே தலைகீழாக புரட்டி போடும் அளவுக்கு சக்தி உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான் - ஜியோ 5ஜி, விரைவில்.!

ஏற்கனவே உலகம் முழுவதிலும் உள்ள தங்கள் நிறுவன தொழிற்சாலைகளில் 5G தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகள் ஆரம்பித்துவிட்டதாகவும் குறிப்பாக கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இதன் ரிசல்ட் வெற்றிகரமாக வந்துள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருட இறுதிக்குள் பிரிட்டனில் உள்ள சாம்சங் தொழிற்சாலையிலும் 5G தொழில்நுட்பம் குறித்த சோதனை தொடங்கும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

இந்த உலகிற்கு 5G தொழில்நுட்ப இண்டர்நெட் நெட்வொர்க் மட்டுமின்றி 5G தொழில்நுட்பத்தில் புதிய பொருட்களும் தயாரிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 5G தொழில்நுட்பத்தில் ரேடியோ ஸ்டேஷன், 5G தொழில்நுட்பத்தில் ஹோம் ரூட்டர் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவைகளை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தே இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரியுமா உங்களுக்கு-இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 450 மில்லியன்.!

இந்த புதிய உபகரணங்கள் குறித்து சாம்சங் நிறுவனம் மேலதிக விபரங்களை தெரிவிக்கவில்லை என்றாலும் சாம்சங் ரூட்டர் 1Gbps டேட்டாவில் இயங்கும் என்பதை மட்டும் தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் பாக்ஸ்டர் அவர்கள் இந்த 5G தொழில்நுட்பம் குறித்து மேலும் கூறியபோது, பல உபகரணங்களுக்கு தனியாக வாங்க வேண்டிய பொருட்களை இனி வாங்க வேண்டிய தேவையிருக்காது என்றும், நேரமும், பணமும் மிச்சமாகும் வகையில் இந்த 5G தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இனிமேல் வாடிக்கையாளர்களிடம் இருந்து இண்டர்நெட் வேகம் இல்லை என்ற புகார் எழ வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார். வீடு, அலுவலகம் ஆகியவற்றில் மிக வேகமான இண்டர்நெட் கிடைக்கும் என்பதால் 5G என்பது ஒரு மாஸ் கண்டுபிடிப்பாக உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்

மேலும் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து எதிர்காலத்தில் மிகவும் ஆச்சரியத்தக்க வகையில் 5G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Samsung to launch 5G capable products by 2018

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X