மடித்து எடுத்து செல்லலாம் இது சாம்சங் ஸ்மார்ட்போன்.!!

Written By:

வளைந்து மெலிந்து காட்சியளிக்கும் கணினிகள் கேட்க எதிர்கால கருவி போன்று இருந்தாலும் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்கள் இவை வெகு விரைவில் சாத்தியம் என்றே கூறுகின்றது. வளையும் தன்மை கொண்டு மடித்து எடுத்து செல்லும் மொபைல் போனினை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாக 'சாம் மொபைல்' எனும் இணையதளம் தெரிவித்துள்ளது.

மடித்து எடுத்து செல்லலாம் இது சாம்சங் ஸ்மார்ட்போன்.!!

சாம்சங் நிறுவனத்தின் திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே சராசரியாக அவற்றை வெளியிடுவதில் சாம் மொபைல் தளம் பெயர் பெற்றிருக்கின்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் கிடைத்திருக்கும் இந்த தகவல் சீனாவை சேர்ந்த 'வெய்போ' எனும் சமூக வலைதளத்தில் இருந்து கிடைத்தது என சாம் மொபைல் தளத்தில் கூறப்பட்டுள்ளது.

மடித்து எடுத்து செல்லலாம் இது சாம்சங் ஸ்மார்ட்போன்.!!

அந்த வகையில் சாம்சங் நிறுவனம் குவால்காம் தயாரித்த ஸ்னாப்டிராகன் 620 பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் வகைகளை கொண்டு புதிய கருவியை சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவியில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 3ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மடித்து எடுத்து செல்லலாம் இது சாம்சங் ஸ்மார்ட்போன்.!!

சாம்சங் நிறுவனத்தின் வளைந்த கருவிகள் அந்நிறுவனத்தினுள் 'ப்ராஜக்ட் வேலி' எனும் பெயரில் வடிவமைக்கப்பட்டு வருவதாக சாம் மொபைல் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட செய்தி குறிப்புகளில் தெரிவித்திருந்தது. முற்றிலுமாக வளையும் தன்மை கொண்ட கருவியை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாக கூறப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளைதல் மற்றும் மடிக்கும் தன்மை கொண்ட கருவிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் தெரிவித்திருந்தது. இதோடு அந்நிறுவனம் பங்கேற்ற சில ஆலோசனை கூட்டம் மற்றும் மாநாடுகளில் வளையும் திறன் கொண்ட YOUM திரைகளை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாலெட் போன்று மடித்து வைக்கும் திரை கொண்ட கருவிகளின் கான்செப்ட் வீடியோவினை  சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதோடு மடித்து வைத்தால் மொபைல் போன் போலவும், விரிந்த நிலையில் டேப்ளெட் கருவியை போன்று காட்சியளிக்கும் வீடியோவும் வெளியாகியிருக்கின்றது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

English summary
Samsung is working on a phone with flexible screen that bends. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot