Home
News

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. சைலன்ட் ஆக டெலிட் செய்த Samsung.. காணாமல் போன கருப்பு!

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று கேலி செய்யும்படியான ஒரு வேலையை சாம்சங் இந்தியா (Samsung India) நிறுவனம் செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர்.. பயங்கர பில்ட்-அப் உடன் "டார்க், போல்ட், அல்ட்ரா" (Dark. Bold. Ultra) என்கிற டீஸர் போட்டோவை வெளியிட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) ஸ்மார்ட்போனின் புதிய டார்க் பிளாக் கலர் ஆப்ஷன் (New Dark Black Color Option) அறிமுகம் செய்யலாம் என்கிற ஊகங்கள் கிளம்பின. இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் தென் கொரிய தொழில்நுட்ப சாம்சங், பளபளப்பான தோற்றம் மற்றும் கருப்பு வண்ணத்திலான தயாரிப்புகளின் தொகுப்பை ஷேர் செய்தும்.. "சிறிது புதிய பாணியை தழுவ தயாராகுங்கள்" என்று குறிப்பிட்டும் ரசிகர்களில் ஆர்வத்தை தூண்டி இருந்தது.

சைலன்ட் ஆக டெலிட் செய்த Samsung.. காணாமல் போன கருப்பு!

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அதன் கேலக்ஸ் எஸ்25 அல்ட்ராவை டைட்டானியம் பிளாக் (Titanium Black) கலர் ஆப்ஷனில் விற்பனை செய்கிறது. ஆகையால் வரவிருக்கும் புதிய டார்க் கலர் ஆப்ஷன் ஆனது இன்னும் டார்க் ஆன பிளாக் கலரையும் மற்றும் பேக் பேனலில் பளபளப்பான பினிஷையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் சாம்சங் இந்தியா நிறுவனம் ஆனது தான் பதிவிட்ட எக்ஸ் தள போஸ்ட்-ஐ தற்போது நீக்கியுள்ளது. ஆக சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் புதிய கலர் வேரியண்ட் எதுவும் செயல்பாட்டில் இல்லை என்பதை சாம்சங் நிறுவனம் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளது. ஒருவேளை இது வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

Take a Poll

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தற்போது 7 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. டைட்டானியம் சில்வர், டைட்டானியம் கிரே, டைட்டானியம் சில்வர் ப்ளூ, டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஜேட் கிரீன், டைட்டானியம் பிங்க் கோல்ட் மற்றும் டைட்டானியம் வைட் சில்வர் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டு, வாங்க கிடைக்கிறது.

இவைகளில் - டைட்டானியம் பிளாக், டைட்டானியம் கிரே, டைட்டானியம் சில்வர் ப்ளூ, டைட்டானியம் ஒயிட் சில்வர் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களை உலகளவில் கிடைக்கின்றன. மீதமுள்ள டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஜேட் கிரீன், டைட்டானியம் பிங்க் கோல்ட் ஆகிய 3 கலர்களும் சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக மட்டுமே வாங்க கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கான புதிய டைட்டானியம் யெல்லோ (Titanium Yellow) கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தது. அதைப்போலவே தான் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலுக்கான புதிய டார்க் பிளாக் கலர் ஆப்ஷன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைக்கு அது நடக்காது என்பது போல் தெரிகிறத.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் (Samsung Galaxy S25 Ultra Price Details): பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கும், 12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,41,999 க்கும் மற்றும் ஹை-எஎண்ட் 12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,65,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Samsung Galaxy S25 Ultra Major Specifications): பெரிய 6.9 இன்ச் டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், டைட்டானியம் பில்ட் மற்றும் கார்னிங்கின் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung is not launching New Dark Black Color Option of Galaxy S25 Ultra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X