சாம்சங் சைலெண்டாக செய்த வேலை.. வாடிக்கன் சிட்டியே 4 இடங்களில் வாய்பிளந்தது ஏன்?
தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகப்பெரிய ஜாம்பவான் ஆனா சாம்சங் (Samsung) நிறுவனம் உலகளவில் பெரிய தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. சாம்சங் நிறுவனம் புதுமைகளை உலகிற்கு அறிமுகம் செய்வதில் எப்போதும் தவறியதில்லை.
சாம்சங் இப்போது வாட்டிகன் சிட்டியில் (Vatican City) செய்த காரியத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் (St. Peter's Square) நவீன தொழில்நுட்பத்தின் தொடுதலைக் கொண்டுவர அந்நாடு முயற்சி செய்து வருகிறது. அந்த வரிசையின் ஒரு பகுதியாக, வாடிகன் சிட்டியில் சில புதிய திட்டங்களை அந்நாடு செய்து வருகிறது.

இதற்கான, செயல்படுகளில் சாம்சங் நிறுவனமும், வாடிகன் சிட்டி உடன் கூட்டு சேர்ந்து, புதியதொழில்நுட்ப ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள சில இடத்தில் புதிய சாம்சங் LED அவுட்டோர் பேனல்களை நிறுவியுள்ளது. இந்த மிகப்பெரிய டிஸ்பிளேக்களின் சாம்சங் நிறுவனம் ஹர்மான் கார்டன் (Harman Kardon) ஆடியோ தொழில்நுட்பங்களை இணைத்து நிறுவியுள்ளது.
தரமான ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை வாடிகன் சிட்டியில் வழங்குவதற்காக, சாம்சங் நிறுவனம் அதனுடைய பெஸ்டான LED அவுட்டோர் பேனலை நிறுவியுள்ளது. வாடிகன் சிட்டி உடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சாம்சங் முடித்துவிட்டதாக நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் அதன் XHB தொடரிலிருந்து நான்கு வெளிப்புற LED டிஸ்பிளேவை செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நிறுவியுள்ளது.
இந்த இரண்டு பேனல்கள் 7.935m x 4.83m அளவைக் கொண்டுள்ளன. மற்ற இரண்டு LED டிஸ்ப்ளேக்கள் 5.865m x 3.105m அளவைக் கொண்டுள்ளன என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த அவுட்டோர் பேனல்கள் ஒரு அதிவேக அனுபவத்தை உருவாக்குவதற்கும் மேலும் பார்வையாளர்கள் நிகழ்வுகளைப் பார்க்கவும் கேட்கவும் அனுமதிக்கும் வகையில் சிறந்த கோணத்தில் நிறுவப்பட்டுள்ளன.
Samsung XHB தொடரை ஏன் சாம்சங் பயன்படுத்தியது என்றால், சாம்சங்கின் மாபெரும் வெளிப்புறக் டிஸ்பிளேகளில் இந்த சீரிஸ் மட்டும் தான் அதிகமான பிரகாசத்தை கொண்டுள்ளன. இது ட்ரூ-ஓ-லைஃப் இமேஜ்ஜரியை துல்லியமான நிறம் மற்றும் விபரங்களை உருவாக்க அதிக மாறுபட்ட விகிதத்தைக் கொண்டுள்ளன. ஆனால், உயர்தர வீடியோ சமன்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே.
விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் முழுவதும் தெளிவான மற்றும் சீரான பரந்த ஒலியை உருவாக்க, வாடிகனில் நிறுவப்பட்ட இந்த IP66 சான்றளிக்கப்பட்ட டிஸ்பிளேக்கள், அடாப்டிவ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹர்மன் கார்டன் ஆடியோ தீர்வுகளையும் கொண்டுள்ளது. Samsung மற்றும் Vatican City இணைந்து செயல்படுவது இது முதல் முறை அல்ல.
கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரிய நிறுவனமான நெர்வி ஆடிட்டோரியத்தில் இரண்டு உட்புற டிஸ்பிளேகளை நிறுவியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், போப் மற்றும் போப்பாண்டவர் அரண்மனையைப் பாதுகாக்கும் பொறுப்பான பொன்டிஃபிகல் சுவிஸ் கார்ட் (Pontifical Swiss Guard), சாம்சங் க்னாக்ஸ் டிஜிட்டல் (Samsung Knox Digital) பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தியதாக சாம்சங் அறிவித்தது.
இப்போது, சாம்சங் நிறுவனம் மீண்டும் வாடிகன் சிட்டி உடன் கூட்டு சேர்ந்து, 4 இடங்களில் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போப் ஆண்டவரின் ஆராதனைகளை தொந்தரவு இன்றி கண்டு கழிக்க உதவும் பெரிய LED அவுட்டோர் பேனல்களை நிறுவியுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








